நினைவிருக்கிறதா 2012- டிஸம்பர் 21. ஆம் அன்று உலகம் அழியப் போகிறதாம். இதற்கு சான்றாக மாயன் காலண்டரை குறிப்பிடுகிறார்கள்.எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். திரும்பவும் இத் தொடரினை மீண்டும் மீள் பதிவு செய்வதன் நோக்கமே அப்போது படிக்க தவறியவர்களுக்காகவும், 4000 ஆண்டுகளுக்கு முன்னேயே மாயன் இனம் தொழில் நுட்பத்தில் எவ்வாறு அறிவு ஜீவிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான். எப்படியும் 21 ம் தேதிக்குள் தொடர் முழுவதையும் மீள் பதிவு செய்து விடுகிறேன். அவ்வளவு தான் நம் வேலை.
சரி இம் மாதம் 22 ஆம் தேதி மாலை யாரெல்லாம் என்னுடன் தேநீர் அருந்த ரெடியாக இருக்கிறீர்கள்? எதிர் பார்க்கிறேன்….
Engr.Sulthan

2012ல் உலக அழியப் போகிறதாம். இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான். உலகம் அழியப் போகிறதா? அது எப்போது? எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை மிக்கோன் படைத்த இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. யார் இந்த மாயா இன சமூகம்? அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்? இது தான் நம் முன் நிற்கும் கேள்வி. மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் உயிரோசை இணைய இதழில் விளக்கமாக எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப் பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.
Er..சுல்தான்

Date: Saturday, February 4, 2012, 1:28 PM

2012ல் உலக அழியப் போகிறதாம். இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான். உலகம் அழியப் போகிறதா? அது எப்போது? எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை மிக்கோன் படைத்த இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. யார் இந்த மாயா இன சமூகம்? அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்? இது தான் நம் முன் நிற்கும் கேள்வி. மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் உயிரோசை இணைய இதழில் விளக்கமாக எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப் பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்குப் பதிவு செய்கிறேன்.
Er..சுல்தான்

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1

சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?” என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.

அது….! ‘மாயா’.

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.

இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.

ராஜ்சிவா

இதோ 2012ம் ஆண்டு பிறந்து விட்டது.. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது ‘2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது’ என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.

“சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?” என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.

இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.

அது….! ‘மாயா’.

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.

இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.

என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?

சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?

ஆம்….! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.

ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.

இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.

அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.

இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.

சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?

இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.

அவை என்ன என்பதை அடுத்து நாம் பார்ப்போமா!

தகவல் :ராஜ்சிவா

உயிரோசை இணைய இதழ்.

Engr.Sulthan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: