By பழ. நெடுமாறன்

First Published : 25 October 2012 01:45 AM IST

.அசோகச் சக்கரவர்த்தியோ அல்லது அக்பர் சக்கரவர்த்தியோகூட இந்தியா முழுமையும் செங்கோல் செலுத்தியதில்லை. ஆனால், காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக அன்னிய ஆட்சி அகற்றப்பட்டு முதன் முதலாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்தியா ஒரே குடையின்கீழ் வந்தது. முதலாவது பிரதமராகப் பதவி வகித்த ஜவஹர்லால் நேரு உண்மையில் “முடிசூடாத மன்னராக’ மக்களால் போற்றப்பட்டார். அவர் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிற தங்களிடமும் அவரிடம் குடிகொண்டிருந்த நாட்டுப்பற்று, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமதர்மச் சிந்தனை போன்ற பண்புகள் நிறைந்திருக்கும் என நம்புவதே தவறுதான். ஆனால், அப்படி சில உணர்வுகள் ஒட்டிக் கொண்டிருக்காதா என்கிற நம்பிக்கையும்கூட இப்போது அடியோடு தகர்ந்து போய்விட்டது.

சுயதேவை பூர்த்தியின் மூலம் மட்டுமே நமது நாடு முன்னேற முடியும் என நம்பிக்கைக் கொண்ட நேரு, மூலாதாரப் பெருந்தொழில்களை அரசுத்துறையில் அமைத்தார். ரயில்வே, விமானப் போக்குவரத்து, பொதுக்காப்பீட்டுக் கழகம், சுரங்கங்கள், பெட்ரோலியப் பொருள்கள் எடுத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை அரசுடைமை ஆயின. அப்போது விட்டுப்போன வங்கிகள் தேசிய மயம் போன்றவற்றை அவரது மகள் இந்திரா நிறைவேற்றினார். அவ்விருவர் காலத்தில் நாட்டில் அரசுத்துறை (பொதுத்துறை) செழித்து வளர்ந்தது. அதனால், சமச்சீரான தொழில்வளர்ச்சி ஏற்பட்டதுடன், பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் பலமாக அமைக்கப்பட்டது.

2008-ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவ்வளவாக இந்தியாவைப் பாதிக்காமல் போனதற்கு பொதுத்துறை, நிதித்துறை நிறுவனங்கள் அரசுடைமையாக இருந்ததுதான் காரணம் என்பதைச் சிறந்த பொருளாதார நிபுணரான நீங்கள் அறிந்திருந்தும் லாபம் ஈட்டி வருகின்ற “நவரத்தின’ பொதுத்துறைப் பங்குகளை விற்கவும் அவற்றில் 49% அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் உங்கள் ஆட்சியில் முடிவு எடுத்தது எதனால்?

1991-இல் இந்திய நிதியமைச்சராக நீங்கள் பொறுப்பேற்று புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி 20 ஆண்டு காலத்திற்கு மேலாகிவிட்டது. இப்போது நீங்கள் சகல அதிகாரமும் படைத்த பிரதமர் பதவியிலும் இருந்து வருகிறீர்கள். உங்களது பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, இந்திய மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளதா என்ற கேள்விக்கு உரிய விடையை மனசாட்சியைத் தொட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்குநாள் நலிந்து தேய்ந்து போனதன் விளைவாக, இந்த 20 ஆண்டுக் காலத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதுதானே உண்மை?

உலகளாவிய ரீதியில் நேரடி அன்னிய முதலீட்டிற்கான சிறந்த நாடுகளில் இரண்டாம் இடத்தை இந்தியா வகிக்கிறது என ஐ.நா. வணிக மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு அதனுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதைப்போல ஜப்பானிய வங்கியும் கூறியுள்ளது.

2012-2014 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க வணிகத் தொழில் முதலீடுகளுக்கு ஏற்ற மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என லீட்ஸ் பல்கலைக்கழக வணிகப் பள்ளி குறிப்பிட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டில் இந்தியாவில் 8% ஆக இருந்த கனடிய நிறுவனங்களின் முதலீடு 2010-இல் 13.4 % ஆக உயர்ந்துள்ளது. 2010-இல் இந்தியாவில் அமெரிக்கா 2014 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இந்தப் பட்டியல் இன்னமும் நீளுகிறது. அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டைச் சுரண்டுவதற்கு எந்த அளவு நீங்கள் அனுமதித்திருக்கிறீர்கள் என்பதைத்தான் மேற்கண்ட விவரங்கள் அப்பட்டமாகத் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய தொடர்சங்கிலி நிறுவனங்களான வால்மார்ட், செயின்ட்ஸ்பெரி, டெஸ்கோ ஆகியவை இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறக்க அனுமதி அளித்ததின் மூலம், சிறு, குறு தொழில் அதிபர்கள், சிறு வணிகர்கள் ஆகியோர்களின் வாழ்க்கையை அடியோடு அழித்துவிட கங்கணம் கட்டியிருக்கிற நீங்கள் ஏழை மக்களுக்காக அளிக்கப்பட்டு வரும் மானியங்களைக் குறைத்துவிடவும் முடிவுசெய்திருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு அளிக்கப்படும் டீசல், ரசாயன உரம் ஆகியவற்றுக்கான மானியம், மக்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் மானியம் ஆண்டிற்கு 3.25 லட்சம் கோடி ரூபாய்களாகும். இந்த இழப்பை எப்படி அரசினால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியும் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1.76 லட்சம் கோடி ரூபாய்களாகும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ரூ. 1.86 லட்சம் கோடியாகும். ஆக மொத்தம் 3.62 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வரவேண்டிய பணம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த ஊழல்களை மட்டுமல்ல, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் போன்ற பல்வேறு ஊழல்களையும் அரசு தடுத்து நிறுத்துமானால், அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டே, மக்களுக்குத் தேவையானவற்றை மானிய விலையில் அளிக்க முடியும்.

புள்ளிவிவரங்களை மேலும் அடுக்கிக்கொண்டே போக நான் விரும்பவில்லை. அன்னிய நிறுவனங்களின் வரவு நமது நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்தாக முடியும் என்பதை உணராமல் செயற்படுகிறீர்கள். மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகெங்கிலுமுள்ள பின்தங்கிய நாடுகளின் மீது திரும்பியது. அந்த நாடுகளில் வாழும் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிப்பது, தங்களுடைய உற்பத்திப் பொருள்களை விற்பதற்குரிய சந்தையாக அந்த நாடுகளை மாற்றுவது என முடிவு செய்தன.

அன்னியர் காலடி படாத நம் மண்மீது அன்னியர்கள் வரிசையாகக் கால் பதித்தார்கள். கி.பி. 1500-இல் கோழிக் கோட்டிலும், கி.பி.1506-இல் கோவாவிலும் போர்த்துகீசிய வணிகர்கள், ஜமோரின் மன்னனின் அனுமதியைப் பெற்று வணிகக் கோட்டைகளை அமைத்துக்கொண்டார்கள். கி.பி. 1600-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலும், கி.பி.1602-இல் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலும், கி.பி.1661-இல் பிரெஞ்சு இந்தியக் கம்பெனி என்ற பெயரிலும் இந்திய மண்ணில் வர்த்தகம் செய்வதற்காக இந்நாடுகள் வந்திறங்கின.

தென்னாட்டில் ஆற்காடு நவாபின் முன் மண்டியிட்டு அனுமதி பெற்று ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் வணிகம் புரியத் தொடங்கினார்கள். வங்காளத்தில் நவாப் நசீம் முன் மண்டியிட்டு வணிக அனுமதி பெற்றனர்.

எனது மூதாதையும் புகழ்பெற்ற முகலாய மன்னருமான ஜஹாங்கீரின் முன் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் என்ற ஆங்கிலேயர் 1609-இல் மண்டியிட்டு வணிகத்திற்கான அனுமதி கோரினார். ஆனால், 1611-ஆம் ஆண்டு வரை ஜஹாங்கீர் அனுமதி தரவில்லை. 1611-இல் சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனியின் கிட்டங்கியைத் திறப்பதற்கு ஜஹாங்கீர் அனுமதி கொடுத்தார். இதற்குக் காரணம் சர். தாமஸ் ரோ என்னும் ஆங்கிலேயப் பிரமுகரும், கேப்டன் மிடில்டன் என்ற ஆங்கிலேய தளபதியும் ஆவார்.

இதற்குப் பிறகு கல்கத்தாவிலும், சென்னையிலும் அவர்கள் வணிகக் கோட்டைகள் கட்டிக்கொள்ள முகலாய மன்னர் அனுமதித்தார். எனது மூதாதையரான ஜஹாங்கீர் மன்னர் செய்த இந்தத் தவறு இந்தியாவின் எதிர்காலத்தையே பாழாக்கிவிட்டது.

வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் படிப்படியாக ஆட்சியைக் கைப்பற்றி, இறுதியில் இந்தியாவில் தங்களது ஆட்சியை நிறுவி, 300 ஆண்டுகள் ஆண்டபோது அவர்களை வெளியேற்ற நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு போராட வேண்டியிருந்தது, அளப்பரிய தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது என்பதை அடியோடு மறந்து நாட்டை மீண்டும் அன்னியரிடம் அடிமைப்படுத்தும் வகையில் உங்களுடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

தென்னாட்டில் ஆற்காடு நவாபின் அனுமதியைப் பெற்று தங்களின் வணிகத்தைத் தொடங்கிய ஆங்கிலேயர்கள் நாளடைவில் பல்வேறு பகுதிகளில் சுதந்திரமாக ஆண்ட சிற்றரசர்களை ஒடுக்கத் தொடங்கினார்கள். அவர்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈவுஇரக்கமின்றி அழித்தார்கள்.

பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ராணி வேலு நாச்சியார், திப்பு சுல்தான் போன்ற வீரமிக்க மன்னர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி இறுதியாக தூக்குக் கயிற்றில் தொங்கினார்கள். திப்புவின் புதல்வர்களும் அவரது படை வீரர்களும் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டார்கள்.

1906-ஆம் ஆண்டில் வேலூரில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சி ஈவுஇரக்கமின்றி ஒடுக்கப்பட்டது. அதன் பின் தென்னாடு ஆங்கிலேயர் வசமாயிற்று.

வங்காள நவாபான சிராஜ் உத்தெüலாவுக்கு எதிராக அவருடைய படைத் தளபதி மீர் ஜாபரை தங்கள் வசமாக்கிக் கொண்டு, ஆங்கிலேயர்கள் அவரைத் தோற்கடித்தனர். அதன் பின் வங்காளம், பிகார், ஒரிசா, ஆகியவை அவர்கள் வசமாயின. இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஆண்ட மன்னர்களை ஒழித்துக்கட்டி நாட்டைக் கைப்பற்றினார்கள். இந்த வரலாற்று உண்மைகளை மன்மோகன் அவர்களே மறந்துவிடாமல் எண்ணிப் பாருங்கள்.

எங்கள் மூதாதையரான ஜஹாங்கீர் முன் மண்டியிட்டு வணங்கி வணிகத்திற்கு அனுமதி பெற்ற ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் வஞ்சகக் குணத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

மாட்சிமை தங்கிய முகலாயச் சக்கரவர்த்தியின் விசுவாசமிக்க ஊழியன் என அவருக்கும் அவருக்குப்பின் அரியணை ஏறிய அனைவருக்கும் பணிவாகக் கடிதம் எழுதியவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கினார்கள்.

ஆண்டுதோறும் சக்கரவர்த்திக்கு அளித்து வந்த கப்பத்தை நிறுத்தினார்கள். அவருக்குக் கீழிருந்த சிற்றரசர்களை சுதந்திர மன்னர்களாக ஆகும்படி தூண்டிவிட்டனர். 1835ஆம் ஆண்டு முகலாயச் சக்கரவர்த்தியின் படமோ பெயரோ இல்லாத நாணயங்களை கம்பெனியின் பெயரில் வெளியிட்டார்கள். இதன் மூலம் ஆட்சி அதிகாரம் தங்களிடமே இருக்கிறது என்பதை மக்களுக்கு மறைமுகமாக உணர்த்தினார்கள்.

நீதிமன்றங்களிலும் அரசு அலுவலகங்களிலும், பாரசீக மொழிக்குப் பதில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கினார்கள். அடுத்ததாக நாடெங்கும் இருந்த சுதேசி மன்னர்கள் வாரிசு இல்லாமல் இறந்துபோனால் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆங்கிலேய ஆட்சியுடன் இணைக்கப்படும் என வைசிராயாக இருந்த டல்ஹெளசி அறிவித்தார்.

முகலாய பாதுஷாவாக நான் பொறுப்பேற்றபோது மராட்டிய பேஷ்வா, ஐதராபாத் நிஜாம், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆகியவற்றின் மீதுள்ள மேலாதிக்கத்தை என்னிடமிருந்து ஆங்கிலேயர்கள் பறித்தார்கள்.

தங்களின் சம்மதம் பெறாமல் எனது படையில் யாரையும் சேர்க்கக்கூடாது என கூறினார்கள். தில்லியில் என்னைக் கண்காணிப்பதற்காக “ரெசிடன்ட்’ என்ற பெயரில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். பெயரளவில் மட்டுமே நான் சக்கரவர்த்தியாக இருந்தேன். உண்மையைச் சொல்லப்போனால் செங்கோட்டையில் நான் ஒரு கைதிபோல மட்டுமே வாழ முடிந்தது. எனக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே உதவித்தொகை அளித்தார்கள். அரண்மனையைத் தாண்டி யார் மீதும் எத்தகைய அதிகாரத்தையும் செலுத்த இயலாதவனாக நான் ஆக்கப்பட்டேன்.

இந்தச் சூழ்நிலையில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் பெரும் புரட்சி 1857-ஆம் ஆண்டு வெடித்தது. புரட்சியில் ஈடுபட்ட வீரர்கள் டில்லியைக் கைப்பற்றியதோடு செங்கோட்டையைச் சூழ்ந்துகொண்டு தங்களுக்குத் தலைமை வகிக்கும்படி என்னை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: