டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
To:

First Published : 12 October 2012 03:17 AM IST
புகைப்படங்கள்

அதிக அளவுக்கு (103 டிகிரிக்கு மேல்) காய்ச்சல், கடும் தலைவலி, கண் வலி, குமட்டல், உடல் வலி, மூட்டு இணைப்புகளில் வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கொடுங்கையூரில்.. சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கொசுக்களின் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் கல்லூரி மாணவி ரேணுகா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசு மருத்துவமனைகளின் புற நோயாளிகள் பிரிவுக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்துள்ளதையடுத்து இது ஊர்ஜிதமாகியுள்ளது. எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் மூன்று நாள்கள் தொடர்ந்து நோயாளியைக் கண்காணித்து விட்டு உரிய ரத்தப் பரிசோதனைகளைச் செய்து காய்ச்சலின் தன்மையைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும் காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்வதில் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அரசு டாக்டர்கள் கூறிய யோசனைகள்: “”தமிழகம் முழுவதும் மின் வெட்டு பிரச்னை உள்ளது. இதனால் நீரை வாளிகளில் பொது மக்கள் தேக்கி வைக்கின்றனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் பகல் நேர கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாகும். எனவே தண்ணீரை தேக்கி வைக்கும் வாளிகளை நன்கு மூடி பராமரிக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, கண் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் அவசியம்’ என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Basheer A Sahib

Operator, SFII Urea, SF2 OPERATIONS

Saudi Arabian Fertilizer Company
A SABIC Affiliate

Jubail Industrial City 31961
Saudi Arabia

T +966 (3) 341 1100-8523

F

E BSahib4056@safco.sabic.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: