ஜகாத்தினை வேண்டி….

அன்புள்ளங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
புனித ரமலானின் பிற்பகுதியின் தொடக்கத்தில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் அன்பு தழுவிய வாழ்த்துக்கள்.

குழுமத்தில் உள்ள நம் சகோதரர்கள் அனைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவன் என்ற உரிமையோடு உங்களிடம் சில விசயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

ஜகாத் என்பது மார்க்கத்தில் கட்டாய கடமையாக்கப் பட்டிருக்கும் ஒரு அமலாகும்.அதனால் தான் இறைவன் தன் அருள் மறையில் 30 இடங்களுக்கும் மேலாக தொழுகைக்கு அடுத்த படியாக ஜகாத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறான். கட்டாயக் கடமையான ஜகாத்தினை, ஜகாத் பெற தகுதியுள்ளவர்களுக்கு சரியாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஜகாத் பற்றிய விழிப்புணர்ச்சியை நம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 5×6 வருடங்களுக்கு முன்பு இணைய தளம் மூலமாக எனது தாவாப் பணியினைத் துவக்கி அல்ஹம்துலில்லாஹ் அதில் ஒரளவு வெற்றியும் பெற்று விட்டேன். உற்ற நண்பர்கள்,சகோதரர்கள் சிலரின் மூலம் கிடைக்கும் ஜகாத் தொகையினை உரியவர்களுக்கு பங்கீட்டு வருகிறேன். இதில் எந்த விதமான தவறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலேயே தனி ஒரு மனிதனாக இதை செய்து வருகிறேன்.

ஜகாத்தினை வசூலிக்க முற்றிலும் தகுதி வாய்ந்தவன் என்ற முழு நம்பிக்கையோடு தொடர்ந்து இப்பணியினை செய்து வருகிறேன். இந்த அடிப்படையில் தான் எனது முதல் வெளியீடான “அருள் பொழியும் ரமலான்” நூல் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும் ஏழை இஸ்லாமிய மாணவியருக்கு கல்லூரியில் சேரவும், படிப்பினைத் தொடரவும் தேவையான செலவுகளை ஏற்று செய்ய உத்தேசித்துள்ளேன்.

ஆகவே அன்பு சகோதரர்களே! தங்களின் ஜகாத் பணத்தில் ஒரு சிறு பகுதியையாவது, என் மேல் முழு நம்பிக்கையிருந்தால் மட்டுமே கொடுத்து உதவி இந்த எனது புனித பணியினில் நீங்களும் பங்கெடுக்க உங்களை அன்போடு வேண்டுகிறேன். சென்னை புதுபேட்டையில் என்னை சுற்றி ஏறத்தாழ 17 குடும்பங்கள் வறுமை கோட்டிற்கும் கீழாக, எவ்வித வாழ்வாதாரமுமின்றி கஷ்ட நிலையில், ஆண் துணையின்றி, உங்களின் மேலான உதவியினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். இக்குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் பொருளாதார உதவியினை மற்றவர்களிடம் சென்று பெறக் கூட வெளியில் வர அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் இருக்கிறார்கள். இவர்களுக்கு வீடு தேடிப் போய் உதவிகளை என்னால் முடிந்தளவு செய்து வருகிறேன். பள்ளிவாசல்,மதரஸா கட்டுவதற்காக உங்களின் ஜகாத்தினை அளிப்பதை விட , நம் அண்டை வீட்டாரின் பசியை போக்குவதே சிறந்ததாகும்.இது இறைவனுக்கே உணவளித்த பயனை அடைவது போலாகும்.

இந்த வருடமும் பலர் உங்களின் மேலான உதவியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றிய சில தகவல்கள் இதோ:

2 இஸ்லாமிய பெண்கள் என்ஜினியரிங் அட்மிஷன் கட்டணத்துக்காக உதவி கேட்டிருக்கிறார்கள். எனக்கு நன்கு அறிமுகமான குடும்பம் தான்.

குலசேகரன்பட்டிணத்தைச் சேர்ந்த பாத்திமா நஸ்ரின், பரக்கத் நிஷா, நூகு நஸ்ரின் ஆகிய மூன்று மாணவிகள் ஆதித்தனார் கல்லுரி, வாவு வஜிஹா பெண்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்களின் படிப்பு செலவுக்காக குலசேகரன்பட்டினம் முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேஷன் ஒரளவுக்கு பண உதவி செய்திருக்கிறார்கள். தொடர்ந்து இவர்களின் படிப்பு செலவுக்காக உங்களிடம் உதவி கேட்கிறார்கள். ஸதக்கத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையினை அடைய இவர்களின் கல்விக்காக முடிந்த உதவியினைச் செய்ய வேண்டுகிறேன்.

ஒட்டன் சத்திரத்தை சேர்ந்த சகோதரர் முகம்மது சாதிக் அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வட்டி எனும் பாவச் சுமையில் வீழ்ந்து கரையேற முடியாமல் தவித்து அதில் இருந்து மீள்வதற்காக உதவி கேட்டு மடல் அனுப்பியிருக்கிறார். இந்த கஷ்ட நிலையிலும் அவர் தொடர்ந்து தாவாப் பணியினை ஆற்றி வருவதும், இஸ்லாம் டுடே எனும் மாத இதழை நடத்தி, இலவசமாக விநியோகித்து வருவதும் குறிப்பிடதக்கது. இவரைப் பற்றி ஏற்கனவே நம் குழுமங்களில் எழுதியிருக்கிறேன்.முடிந்தளவு இவருக்கும் உதவி செய்து வட்டியெனும் நரக நெருப்பிலிருந்து இறைவன் இவரைக் காப்பாற்ற உதவுங்கள்.

மேற்கண்டவர்களின் மடல்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். பார்க்கவும்.

இன்னும் மேலே குறிப்பிட்ட ஆதரவற்ற குடும்பங்கள் அவர்களின் அன்றாட தேவைகளுக்காக உங்களின் உதவியை நாடி காத்திருக்கிறார்கள்..

உங்களின் ஜகாத் தொகையினில் ஒரு பகுதியை இவர்களுக்காக வழங்குங்கள் என அன்புடன் உங்களிடம் வேண்டுகிறேன். இவர்களில் யாருக்கு உங்களின் ஜகாத் தொகை சேர விரும்புகிறீர்களோ அதை குறிப்பிட்டு அனுப்பினால் அவரவர்களிடம் சேர்ப்பித்து விடுகிறேன்.நீங்கள் தருவதை உரிய முறையில் உரியவர்களிடம் சேர்ப்பது எனது கடமை. அதனை நியாயமான,நேர்மையான முறையில் செய்வேன்(இன்ஷா அல்லாஹ்) என இறைவன் மேல் ஆணையாக உறுதி கூறுகிறேன்.

ஜகாத் அனுப்ப விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு எனக்கு தகவல் தெரிவிக்கவும். சிறு தொகையாக இருப்பினும் சரியே. அல்லது குழுமத்தில் ஒருவர் மற்றவர்களிடம் வசூலித்தும் மொத்தமாக அனுப்பலாம்.

எனது நோக்கம், ஜகாத் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், ஜகாத் பெறத் தகுதியுடையவர்களுக்கு மட்டும் அவை சேர வேண்டும் என்பதே…

வங்கி விபரம்:

H.Mehar sultan

A/C.no;SB 414362020

Indian Bank

Athiththanar Salai Branch

Chennai-2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: