Archive for July 7th, 2012

26 Things You Can Do With Toothpaste
Although the primary use of toothpaste is to clean and improve the aesthetic appearance and health of teeth, there are also 26 other things that you can use it for. Every household has one and every household uses it at least twice a day. And because of the common availability of toothpaste, you can try everything below. Remember, use only white paste.

1.Removes stain from cloth

To take out all kinds of stain like ink or lipstick. Squeeze some on the spot, scrub and rinse.

2.Even out scratches on CD / DVD

If the screen freezes, take out the disc, put some toothpaste on it, scrub and clean it off.

3.Cleans diamond ring

Just squeeze a little on a used toothbrush, wet the ring, scrub gently, rinse and your
diamond ring should be look sparkling new.

4.Cleans silver

Toothpaste can be used to polish any kind of silver. It really does bring out the shine in silverwares.

5.Placate burns

Right after you get burnt, put it on. It helps to relieve the sting.

6.Removes crayon from painted walls

Rub the marks with the toothpaste and a damp rag. Wipe with water to get rid of residue.

7.Remove carpet stains

Squeeze some onto the carpet, scrub, rinse and let it dry.

8.Relieves insect bites

Spread a little over either of these and you’ll feel soothed and no itches. Mosquito, flea and ant bites work especially well.

9.Keep girl babies’ bows in their hair

If they don’t have much hair this is particularly useful. It doesn’t pull it out, it just washes out.

10.Clean your nails

Teeth and nails are made of the same material. To clean your nails, squeeze some on top of a toothbrush,
wet your nails and brush them thoroughly. You’ll be amazed by the sparkle.

11.Clean shoes

Scrubbing toothpaste with a wet toothbrush over the boots, working shoes and rubber part of sneakers will work. It can also be used to remove scuffs.

12.Put up posters

You can use toothpaste to put up posters without damaging the wall. However, avoid using it for collector posters. It can damage the ink over time.

13.Use it to temporarily seal holes

Can be used as a spackle to fill nail holes. This sounds evil, but you can use it right before you move out of your rented apartment.

14.Clean around the bathroom

Use it to clean shower doors and rings around the bath tub. It has an abrasive so that is why it works good.

15.Clean your vehicle’s headlight lenses

Put some toothpaste in a bowl with some water. Use a buffer pad and clean off fog caused by dirt and bugs hitting them.

16.Clean model cars

Hobbyists who collect and build model cars, robots and action figures can certainly use toothpaste to make them nice and shiny.
17.Remove scratches on your watch crystal

Dab some on the watch and scrub it with tissue.
18.Treat acne

Be very careful when using this. Use it at most once a week. Just dab a small amount on a pimple before bed, wake up and it will dry up.
19.Prevent fog in your swimming goggles

Just wipe it on, clean it off. Works well for me.
20.Clean piano keytops

A dab of toothpaste, a soft cloth and some rubbing will usually clean piano keytops and turn them white again.

21.Deodorize smelly hands

Wash your hands with a dab of toothpaste and it will remove smells like onions and other unpleasant odors.

22.Remove scratches on glassware

Polish with a squeeze of toothpaste. Your glassware should be shining in no time.

23.Remove beach tar

Getting that black beach tar on your feet can put a small crimp in your vacation, but it is easy enough to remove.
Just rub it with some non-gel toothpaste and rinse.
24.Deodorize baby bottles

Works for sour smelling baby bottles. Scrub with toothpaste and a bottle brush and the bottles should end up smelling clean and fresh.

25.Cleans clothes iron

The mild abrasive in non-gel toothpast is just the ticket for scrubbing the gunk off the bottom plate of your clothes iron. Apply the toothpaste to the cool iron, scrub with a cloth, then rinse clean.

26.Remove water marks from furniture

To get rid of those telltale watermark rings left by sweating beverages, gently rub some non-gel toothpaste on the wood with a soft cloth.

Of course, you can also use it for brushing your teeth twice a day!!!!!!

EVERY SEED OF POMEGRANATE WHICH GOES IN YOUR STOMACH IS A SEED OF LIFE FOR YOUR HEART!!!

Two things are full of benefits for the human being, lukewarm water and pomegranate.

Pomegranate is a seasonal fruit in Pakistan so I tried an experiment with dried pomegranate seeds.

I prepared a decoction boiling the fistful of dried seeds in half litre of water for 10 minutes, squeezed the seeds, strained the decoction and advised those patients suffering from painful angina to use a glass of lukewarm decoction on an empty stomach in the morning.

Amazing result was observed, the decoction of dried pomegranate seeds worked like a magic, the feelings of tightness and heaviness of chest and the pain had gone.

It encouraged me to try more experiments on all types of cardiac patients so I tried other experiments on patients who were suffering from painful angina, coronary arterial blockage, cardiac ischemia (insufficient blood flow to the heart muscle) etc, waiting for a bypass surgery. The same lukewarm decoction was used on an empty stomach in the morning. The patients experienced quick relief in all symptoms including painful condition.

In another case of coronary arterial blockage the patient started using half glass of fresh pomegranate juice everyday for one year, although all symptoms were completely relieved within a week but he continued taking it for a whole year, it completely reversed the plaque build-up and unblocked his arteries to normal, the angiography report confirmed the evidence.

Thus decoction of dried pomegranate seeds, fresh pomegranate juice or eating a whole pomegranate on empty stomach in the morning proved to be a miracle cure for cardiac patients. But the lukewarm dried seeds decoction proved to be more effective compared to eating a whole pomegranate or fresh pomegranate juice.

Use of pomegranate in any way has demonstrated even more dramatic effects as blood thinner, pain killing properties for cardiac patients, lowers LDL (low-density lipoprotein or bad cholesterol) and raises the HDL (high-density lipoprotein or good cholesterol). There are more than 50 different types of heart diseases, the most common being coronary artery disease (CAD), which is the number one killer of both women and men in some countries, and there has been no medicinal cure for this disease.

Many cardiac patients have reversed their heart diseases on my advice using one glass of lukewarm decoction of pomegranate dried seeds, half glass of fresh pomegranate juice or eating a whole pomegranate on empty stomach in the morning. It was the very first real breakthrough in the history of cardiology to successfully treat the cardiac diseases by a fruit.

The more super foods to obtain the even faster results for cardiac patients which are most promising curative and protective agents like fresh raisins, quince, guava, prunes (dried plums), natural vinegar, mixture of grape fruit juice and honey in the morning (empty stomach), basil leaves, chicory leaves, powder of oregano leaves and rock salt in equal quantity (in case the patient is not hypertensive) and sesame oil as cooking oil for cardiac patients.

It is regretted to say that treating the heart patients and bypass surgery has become far more profitable business around the world which has failed to help avert life threatening heart attacks and life time cardiac complications resulting in almost paralyzed life. A regular use of pomegranate in any way ensures a healthy cardiac life, thinning your blood, dissolving the blood clots and obstruction inside the coronary arteries, maintains an optimal blood flow, supports a healthy blood pressure, prevents and reverses atherosclerosis. (Thickening of the internal lining of the blood vessels) from whatever I experienced and observed in last several years, I can say:

“A pomegranate a day keeps the cardiologist away” you can try and see the wonder

பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு பெட்ரோல் 50 ரூபாயா? அதுவும் ஒரு லிட்டர் 100கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்குமா? இது நிஜமா?இதுல எங்க மன்மோகன் சிங் வந்து சதி பண்றார்னு தலையை பிய்த்துக்கொள்ளும் நண்பர்களே, படியுங்கள் மேலே.

“பெட்ரோலிய பொருட்களின் சர்வ தேச விலை அதிகரித்து விட்டது.”
“டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பாதாளத்துக்கு சென்று விட்டது.”
“எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன”
“வீட்டு சிலிண்டர்,கேரசின்னுக்கு கொடுக்கும் மானியங்களால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.”
“கச்சா எண்ணெய்யின் விலையை opec நாடுகள் தான் நிர்ணயிக்கின்றன – மத்திய அரசின் கையில் எதுவும் இல்லை”

மணி சங்கர அய்யர், முரளி தியோரா, ஜெய்பால் ரெட்டி கடந்த 8 ஆண்டுகளில் மேற்கண்ட வசனத்தை இவர்கள் எல்லாரும் முழங்கி இருக்கிறார்கள். காற்புள்ளி,அரை புள்ளி மாறாமல். ஆனால் உண்மை நிலைமைக்கும், இந்த பித்தலாட்ட மக்கள் விரோத காங்கிரஸ் அரசின் கூற்றுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பது பால் குடிக்கும் குழந்தைக்கு கூட தெரிந்து,தெளிந்து விட்ட இந்த சூழலில், பெட்ரோலிய வளம் தொடர்ச்சியாக, மிக வேகமாக அருகி வரும் இன்றைய நாளில் பெருகி வரும் பெட்ரோலிய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு என்ன? அந்த தீர்வு எட்டப்பட்டு விட்டதா? அப்படியாயின் அதை செயல் படுத்துவதில் என்ன தயக்கம்? இதில் நம் மன்னாரு மன்மோகன் எங்கே வருகிறார்? தியாகத் திரு விளக்கு சோனியா எங்கே சதி செய்கிறார்? எண்ணெய் நிறுவனங்களின் சதி என்ன? தனியார் நிறுவனங்களின் லாபி இதில் எங்கே இருக்கிறது?
லிட்டருக்கு 100 கிலோமீட்டர் போகும் பெட்ரோலின் விலை 50 ரூபாய், விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும், கழிவு மறு சுழற்சி ஏற்படும், வளிமண்டலத்தில் கார்பன் மாசின் அளவு அதிகரிப்பது குறையும்,மிக அதிகமாக அந்நிய செலாவணி மிச்சமாகும், நாட்டில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், விவசாயம் சார்ந்த பொருள் ஆனாதால் பெருவாரியான மக்களுக்கு நேரடியாக பயன் தரும்.காய்கறிகள் விலை குறையும், ஸ்கூல் பஸ் கட்டணம் குறையும், ரூபாயின் மதிப்பு உயரும். முற்றிலும் சுதேசி தயாரிப்பு, யாரிடமும் கையேந்த வேண்டாம். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும், விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இத்தனையையும் தாண்டி எரிபொருள் தீர்ந்து போய்விட்டால் என்ன என்பது போன்ற கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நலனில், நல்வாழ்வில் வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். இது போன்ற நல்லதெல்லாம் இந்திய மக்களுக்கு ஏற்படும் அப்படினு தெரிஞ்சாலே ,மக்கள் நல்லாயிருந்துடுவாங்க அப்படிங்கற ஒரு கருதுகோள் போதுமே காங்கிரஸ் அரசு இதை தடுத்து நிறுத்த. நம்ம மன்னாரும், தியாக திரு விளக்கும் அதை கெடுத்து, குட்டி சுவராக்கி நாட்டை எப்பவும் கேவலமான பிச்சைக்காரன் நிலைமையில் வைத்திருப்பதற்கு குறுக்கே நிற்கும் எதையும் இவர்களால் தாங்க முடியாது என்ற அரிச்சுவடி உண்மையை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்கள். பெட்ரோல் 50 ரூபாயா? எப்படி?

எத்தனால் (CH3CH2OH)etoh என்றும் அறியப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 25-85% வரை கலந்து விற்பதன் மூலமாக நமக்கு பெருமளவு பணம் மிச்சமாகும். எத்தனால் சேர்க்கப்பட்ட பெட்ரோலியம் அதிகப்படியான ஆக்ஸிஜனை சுற்றுப்புறத்தில் வெளியிடுகிறது. மாசு படிந்த கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. எனவே இது ஒரு சுற்றுச்சூழல் நேசமான(eco-friendly) ஒரு செயல். எத்தனால் என்பது விவசாய பொருட்களில் இருந்து பெறப்படும் ஒரு வகையான ஹைட்ரோகார்பன், ஆல்கஹால் வகையை சார்ந்தது. ஆகச்சிறந்த மாற்றாக இது நிச்சயமாக இருக்கும். இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப்பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தும்போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது, கரும் புகை வெளிப்பாடு குறைந்து, ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி, சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது. இது பற்றி சொல்கின்ற, எழுதுகின்ற விஷயங்கள் எதுவும் புதிதல்ல – விஞ்ஞானிகளின் எதிர்காலக் கனவும் அல்ல.ஏற்கெனவே சில நாடுகளில் நடைமுறைக்கு வந்து அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நடைமுறையில் மிகச்சுலபமாக கொண்டு வரக்கூடிய ஒரு முறை தான்.
“எத்தனால்” இது கரும்பு, மக்காசோளம், உருளைகிழங்கு, குச்சிக்கிழங்கு, சில வகையான பாசிகளில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது.இதை பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக உபயோகிக்கலாம். பெட்ரோலுடன் குறிப்பிட விகிதத்திலும் கலந்து உபயோகிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இது பெட்ரொலை விட சிறந்தது என்றே சொல்லாம். அதுமட்டுமல்லாது இதன் விலையோ மிக குறைவு. மொலாசஸ் எனப்படும் நெடியடைய கழிவுகளிலிருந்தும் இதனை பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், பெருமளவு குறைக்கலாம். நம் நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு இதனால் பெருமளவு பொருளாதார பயன்கள் கிடைக்கவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் உள்ள வாய்ப்பை மத்திய காங்கிரஸ் அரசு மறுப்ப்பதாகவே கொள்ள வேண்டி இருக்கிறது.
எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும். உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை – 100 கிலோ; சக்கை – 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் – 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி – 50 கிலோ.
எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.
ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.
இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ. மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.
தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும். தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.
தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன். இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.
கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.
இந்தியாவில் கரும்பு உற்பத்திக்கு பஞ்சமே இல்லை.அபரிமிதமான உற்பத்தி காரணமாக தகுந்த விலை கிடைக்காமல் விவசாயிகள் போராடுகிறார்கள்.இங்கு கரும்பானது, சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை.கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும் கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும்,அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு பயன்படுத்தவும் துவங்கினால் உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும். இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்ட கரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும் என்பதால் சர்க்கரை விலை கணிசமாக குறையும். கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும். இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையோடு, உபபொருளாக எத்தனாலும் தயாரிக்க வேண்டி இருப்பதால், அதன் பொருட்டு அதிக நபர்களுக்கு வேலை கிடைக்கும். எத்தனாலை உற்பத்தி செய்ய, கையாள, மற்ற இடங்களுக்கு அனுப்ப, எண்ணை நிறுவனங்களில் இவற்றை கலந்து புதிய சதவீதத்தில் எரிபொருளை உற்பத்தி செய்ய – என்று ஏகப்பட்ட புதிய தொழில்களும்,வேலைகளும் உருவாகும்.பெட்ரோலின் விலையில் 4ல் 1 பங்கு விலைக்கு எத்தனால் கிடைக்கும் என்பதால் பெட்ரோல், டீசலின் விலை கணிசமாக குறையும். கச்சா எண்ணை இறக்குமதி பெரும் அளவில் குறையும்.இதனால் பெரும் அளவில் டாலர் – அந்நியச் செலாவணி மிச்சமாகும். டாலர் கையிருப்பு அதிகம் ஆவதால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.
எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும். எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் – அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறையும்.எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால் எத்தனால் உற்பத்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது.100% எத்தனால் �

Happy Doctor’s Day

The Desidieter team would like to take the opportunity to wish all the doctors a very “Happy Doctor’s Day”!
India celebrates National Doctor’s Day on the 1st of July every year to commemorate the birthday of the famous Indian physician, educationist and freedom fighter Dr BC Roy. Dr Roy worked for the upliftment of thousands of patients and was instrumental in starting various institutions and hospitals across India. Later he joined politics and became the Chief Minister of West Bengal. For his dedication and service to the Indian public he was even awarded the Bharat Ratna. Later in 1976, the B.C Roy National Award was instituted in his memory.
The Award is presented every year on the 1st Of July by the President of India in various categories like: Medical man-cum-Statesman, Statesmanship of the Highest Order in India, Eminent Medical Person, and Eminent person in Philosophy and Eminent person in Arts.
Though this has been around for so many years, it’s surprising to note that not many Indians are aware of this day. So, this Doctor’s day surprise your Doctor by wishing him/her and thank them for all that they have done for you and your family!

Engr.Sulthan

நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்

அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன்.

இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான்.

ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது.
அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை.
பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை.
மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை.

நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இருதயம், சிறுநீரகம், நரம்புகள், என ஒவ்வொறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.
இவை வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுற தீவிரமாகும். அதேபோல உயர்இரத்த அழுத்த நோய் உள்ளவர்களிலும் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.
இதில் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகத்தில் ஏற்படுவதாகும்.
நீரிழிவு உள்ளவராயின் உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதித்து அதன் நிலையைக் கண்டறிய வேண்டியது மிக முக்கியமாகும்.
அடிப்படைத் தகவல்கள்

சிறுநீரக நோய் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பது அவசியம்.
சிறுநீரக நோய் ஆரம்ப நிலையில் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டாது.
காலம் செல்லச் செல்ல சிறுநீரக நோய் தீவிரமாகிக் கொண்டு போகும். இறுதியில் அது செயலிழக்கும் kidney failure நிலை ஏற்படும். சிறுநீரக செயலிழப்பு மிகத் தீவிரமான நிலை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலில் சேரும் கழிவுப்பொட்களை செயற்கையாகச் சுத்தம் (dialysis) செய்யும் சிகிச்சையை தொடர்ந்து செய்ய நேரிடும். அல்லது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை (Kidney Transplant) செய்ய நேரும். இவை மிகுந்த தொல்லையானதும் பாரிய பொருட் செலவு மிக்கனவுமாகும்.
ஆயினும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதைக் சிகிச்சைகள் மூலம் குணமாக்க முடியும். அல்லது அது தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தியாகும். இச் சிகிச்சைகள் சிறுநீரகப் பாதிப்பை மட்டுமின்றி இருதயத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க உதவும். ஆயினும் எவ்வளவு விரைவில் பாதிப்பைக் கண்டறிகிறீர்கள் என்பதில்தான் சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

சிறுநீரக நோய்களுக்கான வேறு முக்கிய காரணிகளும் உள்ளன. அவை உள்ளவர்களும் சிறுநீரகத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இருதய நோயுள்ளவர்கள்
தமது நெருங்கிய சொந்தங்களில் சிறுநீரக நோயுள்ளவர்கள்.

எத்தகைய பரிசோதனைகள்

1. இரத்தப் பரிசோதனை. சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றலைக் கண்டறியும் (Glomerular filtration rate- GFR) பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீரகத்தின தொழிற்பாடானது வடிகட்டுதல் ஆகும். மேலதிக நீரையும், குருதியில் சேர்ந்த கழிவுப் பொருட்களையும் அகற்றும். இச் செயற்பாடு எந்தளவு செயற்படுகிறது என்பதைக் காட்டும் பரிசோதனை இது.

2. சிறுநீரகப் பரிசோதனை. சிறுநீரில் அல்பியுமின் என்ற புரதம் வெளியேறுவது சிறுநீரக நோயில் ஏற்படும். சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் (Urine Full report- UFR) இதனைக் கண்டறிய முடியும்.

ஆயினும் ஆரம்ப நிலையில் மிகக் குறைந்தளவு புரதம் வெளியேறுவதை விசேட நுண்ணிய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இதனை அறிய (Urine for Microalbumin) என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை எவை?

நீரிழிவையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க விடாது கட்டுப்பாட்டிற்கள் வைத்திருக்க வேண்டும்.

இரத்த சீனியின் அளவு Fasting blood Sugar எனில் 110 ற்குள் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் பரிசோதனை HbA1C எனில் 7ற்குள் கட்டுப்படுத்த வேணடும்.
இரத்த அழுத்தத்தை 130/80 ற்குள் வைத்திருக்க வேண்டும்.
உணவில் உப்பின அளவைக் குறைக்க வேண்டும்.
தேவையான இரத்த சிறுநீர்ப் பரிசோதனைகளை மருத்துவர் ஆலோசனையும் காலந்தவறாது செய்ய வேண்டும்.
சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாது குறிப்பிட்ட நேரங்களில் உட்கொள்ள வேண்டும்.

மேற் கூறிய பெண்ணின் நீரிழிவு கட்டுப்பாடின்றி மோசமாக இருந்தது. சிறுநீரில் நுண்ணிய அளவில் புரதம் (Microalbumin) வெளியேற ஆரம்பித்திருந்தது.

ஆயினும் அவளது சிறுநீரகம் இன்னமும் மோசமான நிலையான செயலிழப்பு நிலையை அடையவில்லை. நம்பிக்கையூட்டி சிகிச்சையில் தேவையான பல மாற்றங்களை உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

உங்களுக்கான பரிசோதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
Engr.Sulthan

சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்…
பழமொழிகள்

க
கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
கடல் திடலாகும், திடல் கடலாகும்.
கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
கண் கண்டது கை செய்யும்.
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
கரணம் தப்பினால் மரணம்.
கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
கல்லாதவரே கண்ணில்லாதவர்.
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
கல்வி அழகே அழகு.
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
களவும் கற்று மர
இது ‘களவும் கத்தும் மற’ என்பதன் திரிந்த பழமொழி
களவும் கத்தும் மற
களவையும் சூதாட்டத்தையும் மற
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கள்ள மனம் துள்ளும்.
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
கனிந்த பழம் தானே விழும்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
கா

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
காணி ஆசை கோடி கேடு.
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
காரண குருவே காரிய குரு!
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
காலைக் கல்; மாலைப் புல்
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

கி, கீ

கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
கிட்டாதாயின் வெட்டென மற
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
கீர்த்தியால் பசி தீருமா?
கீறி ஆற்றினால் புண் ஆறும்.
கு, கூ

குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
குணத்தை மாற்றக் குருவில்லை.
குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
குப்பை உயரும் கோபுரம் தாழும்.
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.
குரங்கின் கைப் பூமாலை.
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
குருவிக்கேத்த ராமேஸ்வரம்
இது ‘குறி வைக்க ஏற்ற ராம சரம்’ என்பதன் திரிந்த வழக்கு
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
குறி வைக்க ஏற்ற ராம சரம்
குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
கெ

கெடுக்கினும் கல்வி கேடுபடாது
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
கெடுவான் கேடு நினைப்பான்
கெட்டாலும் செட்டி செட்டியே,
கிழிந்தாலும் பட்டு பட்டே.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
கெட்டும் பட்டணம் சேர்
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
கே

கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
கேள்விப் பேச்சு மூளா நெருப்பு
கை

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
இது ‘கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?’ என்பதன் திரிந்த வழக்கு
கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை
கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
கையிலே காசு வாயிலே தோசை
கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்
கொ

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
கொடிக்கு காய் கனமா?
கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
கோ

கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்
கோடி வித்தையும் கூழுக்குத்தான்
கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
கோபம் சண்டாளம்.
கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
கோடி கொடுப்பினும் குடில் பிறந்�

கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம். ஆனால் குறைந்த அளவு இவைகளை சேர்த்துக்கொள்வதால் எந்த தவறும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

http://ping.fm/aWkMH

பாலுணர்வை குறைக்கும் உணவுகள்: நிபுணர்கள் தகவல்

[ மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை உண்ட உடன் பெருஞ்சீரகத்தில் செய்த மிட்டாய்களை சாப்பிடுவது நல்லதல்ல.

ஆல்கஹால் குடிப்பதால் போதைதான் அதிகமாகுமே தவிர பாலுணர்வு சக்தி குறைந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.]

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும்.

சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குறைந்து ஆண்மையும் குறையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். என்கின்றனர் நிபுணர்கள்.

சோயா பால்

பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும்.

பெருஞ்சீரகம்

மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை உண்ட உடன் பெருஞ்சீரகத்தில் செய்த மிட்டாய்களை சாப்பிடுவது நல்லதல்ல.

மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை உண்ட உடன் சிலர் பெருஞ்சீரகத்தில் செய்த மிட்டாய்களை சாப்பிடுவார்கள். இனிப்பு சோம்புவை அதிகம் சாப்பிடுவார்கள். இதுவும் பாலுணர்வு சக்தியை குறைக்குமாம். ஆண்களின் டெஸ்டோஸ்ட்ரோன் அளவை குறைக்கும் சக்தி சோம்புக்கு உண்டு என்கின்றனர் நிபுணர்கள்.

கான்ஃப்ளேக்ஸ்

தினசரி கான்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டால் அது நேரடி பாதிப்பை ஏற்படுத்துமாம். இது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் சுரப்பினை குறைத்து விடும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். கான்ஃப்ளேக்ஸ் உணவை அறிமுகப்படுத்திய கெல்லாக் இது ஆண்களின் பாலுணர்வு சக்தியை குறைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் இது சிறந்த டயட் உணவு என்றும் அதீத பாலியல் உணர்வை கட்டுப்படுத்தக்கூடிய உணவு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜங்க் ஃபுட்

பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

ஆல்கஹால்

ஆல்கஹால் குடிப்பதால் போதைதான் அதிகமாகுமே தவிர பாலுணர்வு சக்தி குறைந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் பின்விளைவினால் அதிக தலைவலி, தலைசுத்தல், எரிச்சல் போன்றவைகளினால் காதல் உணர்வுகள் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம். ஆனால் குறைந்த அளவு இவைகளை சேர்த்துக்கொள்வதால் எந்த தவறும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

http://ping.fm/DpHZa

இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்!

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் சில காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறைபாட்டிற்கு காரணம்

விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை

தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

தூக்கக்குறையாடு ஆண்மையை பாதிக்கும்

ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் தூக்கம் கெட்டாலே இந்த பாதிப்பை உணரலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்களின் பாலுணர்வை ஊக்குவிப்பதில் ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ என்னும் ஹார்மோனிற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு சுரந்தால் மட்டுமே ஆண்களுக்கு உற்சாகம், ஏற்படும். பாலுணர்வில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். ஆனால் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் இளைஞர்களுக்கு அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சராசரியாக 24 வயது கொண்ட 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும், 24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பின்னர் இவர்களது ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த டெஸ்டோஸ்டெரோன் சுரக்கும் அளவுக்கும், ஆண்களின் சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு உள்ளது. இதேபோல் தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவு இரவில் அதிகநேரம் கண்விழித்து இருக்கும் நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து

பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க் புட் உணவுக்கடைகள் காளன் போல முளைத்துவிட்டன. அங்கு சென்று பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதே இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் நிறைய இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது.

குறையும் உயிரணுக்கள்

இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவில் ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் இத்தகைய பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.

இதே விசயத்தில் ஜப்பானில் 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது.

டிரான்ஸ் பேட் கொழுப்பு

தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ALAVUDEEN

informative : take them for what they are!

Food as Medicine

HEADACHE? EAT FISH!
Eat plenty of fish — fish oil helps prevent headaches.
So does ginger, which reduces inflammation and pain.

HAY FEVER? EAT YOGURT!
Eat lots of yogurt before pollen season.
Also-eat honey from your area (local region) daily.

TO PREVENT STROKE DRINK TEA!
Prevent build-up of fatty deposits on artery walls with regular doses of tea. (actually, tea suppresses appetite and keeps the pounds from invading…. Green tea is great for our immune system)!

INSOMNIA (CAN’T SLEEP?) HONEY!
Use honey as a tranquilizer and sedative.

ASTHMA? EAT ONIONS!!!!
Eating onions helps ease constriction of bronchial tubes. (onion packs place on chest helped the respiratory ailments and actually made breathing better).

ARTHRITIS? EAT FISH, TOO!!
Salmon, tuna, mackerel and sardines actually prevent arthritis. (fish has omega oils, good for our immune system)

UPSET STOMACH? BANANAS – GINGER!!!!!
Bananas will settle an upset stomach.
Ginger will cure morning sickness and nausea.

BLADDER INFECTION? DRINK CRANBERRY JUICE!!!!
High-acid cranberry juice controls harmful bacteria.

BONE PROBLEMS? EAT PINEAPPLE!!!
Bone fractures and osteoporosis can be prevented by the manganese in pineapple.

MEMORY PROBLEMS? EAT OYSTERS!
Oysters help improve your mental functioning by supplying much-needed zinc.

COLDS? EAT GARLIC!
Clear up that stuffy head with garlic. (remember, garlic lowers cholesterol, too.)

COUGHING? USE RED PEPPERS!!
A substance similar to that found in the cough syrups is found in hot red pepper. Use red (cayenne) pepper with caution-it can irritate your tummy.

BREAST CANCER? EAT Wheat, bran and cabbage
Helps to maintain estrogens at healthy levels.

LUNG CANCER? EAT DARK GREEN AND ORANGE AND VEGGIES!!!
A good antidote is beta carotene, a form of Vitamin A found in dark green and orange vegetables.

ULCERS? EAT CABBAGE ALSO!!!
Cabbage contains chemicals that help heal both gastric and duodenal ulcers.

DIARRHEA? EAT APPLES!
Grate an apple with its skin, let it turn brown and eat it to cure this condition. (Bananas are good for this ailment)

CLOGGED ARTERIES? EAT AVOCADO!
Mono unsaturated fat in avocados lowers cholesterol.

HIGH BLOOD PRESSURE? EAT CELERY AND OLIVE OIL!!!
Olive oil has been shown to lower blood pressure.
Celery contains a chemical that lowers pressure too.

BLOOD SUGAR IMBALANCE? EAT BROCCOLI AND PEANUTS!!!
The chromium in broccoli and peanuts helps regulate insulin and blood sugar.

Kiwi: Tiny but mighty. This is a good source of potassium, magnesium, Vitamin E & fibre. It’s Vitamin C content is twice that of an orange.

Apple: An apple a day keeps the doctor away? Although an apple has a low Vitamin C content, it has antioxidants & flavonoids which enhances the activity of Vitamin C thereby helping to lower the risks of colon cancer, heart attack & stroke.

Strawberry: Protective fruit. Strawberries have the highest total antioxidant power among major fruits & protects the body from cancer causing, blood vessels clogging free radicals. (Actually, any berry is good for you..they’re high in anti-oxidants and they actually keep us young……. ..blueberries are the best and very versatile in the health field……. .they get rid of all the free-radicals that invade our bodies)

Orange : Sweetest medicine. Taking 2 – 4 oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones as well as lessen the risk of colon cancer.

Watermelon: Coolest Thirst Quencher. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione which helps boost our immune system. They are also a key source of lycopene – the cancer fighting oxidant. Other nutrients
found in watermelon are Vitamin C & Potassium. (watermelon also has natural substances [natural SPF sources] that keep our skin healthy, protecting our skin from those darn uv rays)

Guava & Papaya: Top awards for Vitamin C. They are the clear winners for their high Vitamin C content. Guava is also rich in fibre which helps prevent constipation.

Papaya is rich in carotene, this is good for your eyes. (also good for gas and indigestion)

Tomatoes are very good as a preventative measure for men, keeps those prostrate problems from invading their bodies……GOOD AS MEDICINE

கடவுள்’ இருக்கிறார்!?!?!

திங்கள்கிழமை, ஜூலை 2, 2012, 14:26 [IST]
-ஏ.கே.கான்
அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.
ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது தியரியிலேயே இருக்கிறது.
இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் ‘கடவுளின் அணுத் துகள்’ (God’s particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.
கூடவே போஸான் என்ற பெயரும் இருக்கிறதே. அது நம் நாட்டைச் சேர்ந்த மாபெரும் இயற்பியல் வல்லுனர் சத்யேந்திர நாத் போஸின் பெயரிலிருந்து வந்தது. அதாவது சப் அடாமிக் பார்ட்டிகிள் எனப்படும் அணுவில் உள்ள துணைத் துகள்களில் 2 வகை உண்டு. ஒன்று நமது போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள். அவற்றுக்குப் பெயர் தான் ‘போஸான்’.
(இந்த கோட்பாடுகளுக்குள் அடங்காத துகள்களுக்கு பெர்மியான் (fermions) என்று பெயர். அதைப் பற்றி சமயம் வரும்போது பார்ப்போம். இப்போ வேணாம்!).

இவ்வாறு போஸான் கோட்பாடுகளுக்கு, விதிகளுக்கு உட்பட்ட துணைத் துகள்களில் முக்கியமானவை photons, gluons மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகியவை. இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை நிரூபித்தாகிவிட்டது. ஆனால், ஹிக்ஸ் போஸான் இன்னும் விஞ்ஞானிகளுக்கு ‘விக்கல்’ தந்து கொண்டே இருக்கும் ஒரு ரகசியமாகவே உள்ளது.
இந் நிலையில் தான் இதைக் கண்டுப்பிடித்தே தீருவது என்ற முடிவில் களத்தில் குதித்தனர் உலக விஞ்ஞானிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.
சோதனை என்றால் நாம் சினிமாக்களில் பார்ப்பது மாதிரி ஒரு டெஸ்ட் டியூபில் 2,3 கலர் கலர் திரவங்களைக் கலந்துவிட்டு அதே வேக வைத்து, வடிகட்டி.. ரசம் தயார் செய்வது மாதிரியான சமாச்சாரமல்ல இது.
பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் பயங்கரமாக மோதவிட்டு அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது.

1,800 ‘சூப்பர் கண்டக்டிங்’ காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 மில்லியன் முறை புரோட்டான்- நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர் திசையில் நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என சிதறின.
கூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானும் எட்டிப் பார்த்ததாக சொல்கிறார்கள். அதைத் தான் வரும் புதன்கிழமை விஞ்ஞானிகள் சொல்லப் போகிறார்களாம்.
2008ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.
ஒரு குழுவுக்கு ‘அட்லஸ்’ (A Toroidal LHC Apparatus) என்று பெயர். இன்னொரு குழுவுக்கு ‘சிஎம்எஸ்’ (Compact Muon Solenoid) என்று பெயர். ஒரு குழுவுக்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே இந்த இரு குழுவினரும் தனித்தனியே இந்த சோதனைகளை நடத்தினர்.

2008ம் ஆண்டிலேயே ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கினாலும் உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் இறுதியில் தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிகளுக்கும் ‘சோதனை’ வந்துவிட்டது.
ஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது பாதிக்கப்பட்டதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் ஓராண்டு தாமதம் ஆகிவிட்டது. குளிர்விப்பான்களை ரிப்பேர் செய்ய ஒரு வருஷமா என்று கேட்கலாம்.
LHCயின் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயு உதவியோடு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது.

காரணம், புரோட்டான்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை. இவ்வளவு டெக்னிகலான விஷயத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு வருடம் ஆகாதா!.
எப்படியோ இந்த ஆராய்ச்சி மூலமாக ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் பார்த்துவிட்டார்கள் என்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் அறிவியல் கிசுகிசு.

‘Higgs Boson’! கடவுளே!

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 9, 2008, 16:14 [IST]
-ஏ.கே.கான்

உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் ‘டூம்ஸ் டே’ ஆசாமிகள்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.

ரொம்ப ‘பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா?. Big bang theory சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.

கனரக இரும்பினால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த கொல்லாய்டர்.

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட சைக்ளோட்ரான்களை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.

1,800 ‘சூப்பர் கண்டக்டிங்’ காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு ‘சக்தி’ உருவாகும். அப்போது ஏற்படும் ‘சப் அடாமிக் லெவல்’ மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்யவுள்ளன.

கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்… ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.

புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய ‘சப் அடாமிக்’ கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை ‘கொத்து புரோட்டோ’ போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் ‘கடவுளின் அணுத் துகள்’ (God’s particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டு்ள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் ‘The brief history of Time’ வாங்கிப் படியுங்கள்)

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது… இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.

அப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..
?
?
?
?
‘தெரியாது’

தகவல் தந்த சகோ.அலாவுதீன் அவர்களுக்கு நன்றி!
உங்களுடன் பயத்துடன் பகிர்ந்து கொள்பவன்
Engr.Sulthan