சிறுபான்மையினருக்கான 4.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில்
மத்திய‌ அரசு நடந்துகொண்ட விதம் புதிராக உள்ளது: பாப்புலர் ஃப்ரண்ட்

சிறுபான்மை முஸ்லிம்கள் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டு எமற்றப்படுகிரர்கள்

சிறுபான்மையினருக்கான 4.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் கோராமல் தயக்கம் காட்டியது விநோதமாகவும் புதிராகவும் உள்ளது என பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ எம் அப்துல் ரஹிமான் டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்கள். அவர் கூறியதாவது நாட்டின் பல பகுதிகளிலிருந்து நமக்கு கிடைத்த தகவலின்படி உள் ஒதுக்கீடு அறிவிப்பு வந்தவுடம் உயர் தொழில்நுட்ப (IIT) மற்றும் மேலாண்மை (IIM) கல்வி நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்க அனுமதி கிடைத்துவிடும் என்று முஸ்லிம் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர், மங்களகரமான அந்த நாளை கொண்டாடினர். சமூக நீதியை நோக்கி ஒரு படி முன்னேறியதாக உணர்ந்தனர். ஆனால் மத்திய அரசின் கபட நாடகத்தால் அவர்களின் கனவு தகர்க்கப்பட்டு ஆசை நிராசையானது .

ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க வாதாடிய கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கௌரவ் பேனர்ஜி அவர்கள் சுமார் நாற்பந்தைந்து நிமிடங்கள் திறமையாக வாதாடியிருந்தாலும் கடைசி நிமிடத்தில் அதற்கு நேர் முரணாக நடந்து கொண்டது புதிராக இருந்தது .

நமக்கு கிடைத்த தகவலின்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்று முறை ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டாமா? இதில் உறுதியாகத்தான் இருக்கிறீர்களா? உங்கள் நிலைப்பாட்டை ஏன் இவ்வாறு மாற்றிக்கொள்கிறீர்கள்? ஏன் இந்த தலைகீழ் மாற்றம்? என்று மூன்று முறை திரும்ப திரும்ப கேட்டபோதும் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் தயக்கம் காட்டியபடி பொருத்தமானதை செய்யுங்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு விசயத்தில் அரசு வழக்கறிஞர் திறமையாக வாதிட்டிருந்தாலும் கடைசி நிமிடத்தில் தடைவிதிக்க கோராமல் பல்டியடித்தது மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உள் நோக்கம் கொண்ட சித்து விளையாட்டைதான் எடுத்துக்காட்டுகிறது. சிறுபான்மை முஸ்லிம்கள் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டு எமற்றப்படுகிரர்கள் என்பதையும் இது எடுத்து காட்டுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அவசர அமர்வு நீதிமன்றத்தில் அவசர அவசரமாக மத்திய அரசு மேல்முறையீடு செய்ததற்கு முக்கிய காரணம் IIT யில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாலோசனையின் இறுதி நாள் ஜூன் 15 எனவே அதற்கு முன்னரே 4.5 சதவீத சிறுபான்மை முஸ்லிம் உள் ஒதுக்கீட்டை உறுதி செய்து கொள்ளவேண்டும், பாதுகாக்கவேண்டும் அதை இந்த வருடமே நடைமுறை படுத்திவிடவேண்டும் என்ற அடிப்படையில்தான்.

ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய அரசுக்கு இல்லையென்றால் ஏன் விடுமுறைக்கால அவசர பெஞ்ச் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும்? இறுதியில் ஏன் பல்டியடிக்கவேண்டும்? எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அக்கறையெல்லாம் இல்லை என்பது நன்கு விளங்குகிறது. இந்த பிரச்சனையை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கீழ்த்தரமான அற்ப அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி தொடர்ந்து அரசியல் நடத்தவேண்டும் என்பது தான் அதன் எண்ணமாக உள்ளது என்பது நன்கு அறிய முடிகிறது.

இந்த வழக்கில் பாப்புலர் பிரண்டும் ஒரு பிரதிவாதியாக இணைத்துக்கொள்ள மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடைபெறுவதாக தேசிய தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
__._,_.___

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: