கு முன் சில எளிய மருத்துவ குறிப்புகளை இங்கு பதிவு செய்திருக்கிறேன். இதற்கு ஒரு டாக்டர் மறுப்பு தெரிவித்து, முதலில் நீங்கள் பரீட்சித்துப் பார்த்து பின் குணம் கிடைத்தால் மட்டுமே இது போன்ற குறிப்புகளை வெளியிட வேண்டும் அல்லது தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உறுதி செய்ய வேண்டும் என்கிறார். 5 ரூபாய் மருந்தில் குணம் கிடைக்கும் சிறு நோய்களுக்கு டாக்டரிடம் போய் ரூ 500, 1000 என செலவிடுவதில் அர்த்தமில்லை. அதுவும் சில டாக்டர்கள் சிறு நோய்களுக்கு கூட அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று எடுக்க சொல்லி பெரும் காசு பார்த்து விடுவார்கள். இது தான் இன்றைய பெரும்பாலான டாக்டர்களின் தொழில் தர்மம். நம்ம ஊரு பாட்டி வைத்தியத்தை நம்புகிறவர்கள் மட்டும் கீழ்கண்ட முறையினை முயற்சித்து பார்த்தால் அதுவே போதும்.
Engr.Sulthan

குழந்தைகளின் ஞாபக சக்திக்கு–எளிய மருத்துவம்

இன்றைய தலைமுறையினர் தங்களின் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக மாற வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் பிறந்து ஒருவருடம் முடிந்தவுடனே குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கின்றனர். ஓடி விளையாட வேண்டிய வயதில் பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளுக்கு மன அழுத்தைத்தைக் கொடுக்கும் நிகழ்வுகளைத்தான் தற்போது செய்கின்றனர் பெற்றோர்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது தற்போது இல்லாமலே போய்விட்டது. வீடியோகேம், கம்ப்யூட்டர் கேம் தான் விளையாட்டு.

ஆனால் இவை உடலுக்கு பயிற்சி கொடுப்பது இல்லை. போதாக்குறைக்கு மனதிற்கு அழுத்தத்தைக் கொடுப்பதாகத்தான் இருக்கின்றன.

ஆடி, ஓடி விளையாடினால்தான் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.

இதனால்தான் பழங்காலத்தில் குழந்தைகளை ஆடி ஓடி விளையாட முன்னோர்கள் அனுமதித்தனர்.
ஆனால், இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. பள்ளியில் முதல் மார்க் வாங்கவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு குழந்தைகளுக்கு அதிகம் பாடச் சுமைகளைக் கொடுக்கிறார்கள்.

இத்தகைய காரணங்களால் குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து மனமும் சோர்ந்து காணப்படுவார்கள். இந்நிலையில் குழந்தைகளுக்கு ஞாபக மறதி உண்டாகிறது. இத்தகைய மறதிக்கு, உளவியல் காரணத்தோடு, இரும்புச்சத்து பற்றாக்குறையும் ஒரு காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் இக்குறையைப் போக்க ஒரு எளிய மருத்துவம்..

இதற்கு

வல்லாரைக்கீரை – 1 கைப்பிடி
ஆரைக்கீரை – 1 கைப்பிடி
மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகு – 5
சின்ன வெங்காயம் – 5
பூண்டுப்பல் – 2

இவற்றை எடுத்து சூப் செய்து காலை மாலை என இருவேளையும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக மறதி நீங்கும். இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரித்து உடல் சோர்வு நீங்கும்.

மேலும், வல்லாரை இலையை காயவைத்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து காலையில் கொடுத்துவந்தாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும். இதனால் குழந்தைகள் ஆடி, ஓடி விளையாட முடியும். அசதி பறந்தோடிவிடும்.
நன்றி :பெட்டகம்
Engr.Sulthan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: