சர்வதேச பூமி தினம்!
நாகரிக வளர்ச்சியால் வனங்கள், நீர் நிலைகள், விளை நிலம் அழிப்பு, தொழிற்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஓசோன் பாதிப்பு இப்படி இயற்கைக்கு எதிராக, நாம் தெரிந்தே செய்யும் சதியால் ஆபத்தை சுமந்து கொண்டிருக்கிறோம்.
மாசில்லா பூமியை நம் சந்ததிக்கு விட்டுச் செல்ல, நாம் செய்ய வேண்டியது பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதென்ன?
சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெசி ஜெயகரன்: ஐ.நா.,1972 ல் சர்வதேச தலைவர்களை கூட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க தனி அமைப்பை ( ஐ.என்.இ.பி.,) துவக்கியது. இதில் 1992 வரை 20 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டது. மரக்கன்றுகள் நட அரசுகள், தொண்டு நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் பசுமைப்படைகள் உருவாக்கப்பட்டன. கல்லூரிகளில் சுற்றுச்சுழல் துறைகள் ஏற்படுத்தப்பட்டது. பின் நீர், நிலம், காற்று, ஒளி, ஒலி மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். சூரிய சக்தியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். வீட்டுத்தோட்டங்கள் அமைத்து, அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். நீரை மறுசுழற்சி செய்தல், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மனவள மாற்றமே மண்ணை வளமாக்கும்.

சென்ஸ்- சூழல் மைய நிறுவனர் எஸ்.வி.பதி: தமிழகத்தில் நம் வீடுகளில் 2 கோடியே 10 லட்சம் குண்டு பல்புகளை பயன்படுத்துகிறோம். இதனால், இரவில் 4.3 சதவீதம் வெப்பநிலை அதிகரிப்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. குண்டு பல்புகள் பயன்பாட்டை 2015 க்குள் முற்றிலும் தடுக்க அரசு முடிவு செய்துள்ளது. மாற்றாக சி.எப்.எல்.,பல்புகளை பயன்படுத்த வேண்டும். “டிவி’ பிக்சர் டியூப்கள் ஆயுளில் 22 ஆயிரம் மணி நேரம் எரிந்தால் 12 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கிறது. எல்.சி.டி., மற்றும் பிளாஸ்மா “டிவி’ 2 மணி நேரம் பயன்படுத்தினாலே அவற்றிலிருந்து வெளியாகும் வெப்பம் காற்றில் கலக்கிறது. ஒளிரும் பாதரச டியூப் லைட்டுகள், எலக்ட்ரிக்கல் அடுப்புகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாற்றாக எல்.பி.ஜி.,காஸ் பயன்படுத்தலாம். பூமி சூடேற்றத்திற்கு கதிர்வீச்சு சாதனங்கள் பயன்பாடே காரணம். இந்தோனேசியாவில் பெட்ரோல் பயன்பாட்டை 60 சதவீதம் குறைத்து, மாற்றாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இதை ஊக்கப்படுத்த வேண்டும். ஓசோன் படலத்தின் மிருதுத்தன்மையை பாதுகாக்காவிடில், கதிர்வீச்சு புற ஊதா கதிர்களின் வீச்சு அதிகரிக்கும். தோல் மற்றும் புற்றுநோய்கள் பரவும். மரங்கள் 60 சதவீதம் நட்டால், 3 சதவீத வெப்பநிலை குறையும். இது பற்றி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: