அறிவோம் அரிச்சுவடி!
தமிழால் வளர்ந்தவன். தமிழாய் வாழ்பவன். தமிழ் ஆய்ந்தவன். அறிந்தவன், நான். ஆனால் வெளிநாட்டில் வாழும் என் பேத்திக்கு தமிழ் எழுத,படிக்கத் தெரியாது. இது கொடுமையிலும் கொடுமை தான். உண்மையில் வெட்கப் படுகிறேன். வேதனைக் கொள்கிறேன்.
அன்பு வெளி நாட்டு வாழ் நண்பர்களே! மொழி கசடறக் கற்போம். நம் பிள்ளைகளுக்கு அதைக் கற்றுக் கொடுப்போம்.அந்த வகையில் தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் பற்றி தினம் ஒரு எழுத்தாக இங்கு பார்ப்போம். தயவு செய்து உங்களின் குழந்தைகளுக்காக மொழி கற்பிக்க சிறிது நேரத்தை செலவிடுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

ஆ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இரண்டாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை “ஆகாரம்” என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை “ஆவன்னா” என்பது வழக்கம்.

ஆ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இரண்டாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை “ஆகாரம்” என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை “ஆவன்னா” என்பது வழக்கம்.
“ஆ” வின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஆ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழில் உள்ள வினாவெழுத்துக்களில் இதுவும் ஒன்று. இது சொல்லுக்கு இறுதியில் வந்து வினாப்பொருளைக் காட்டும்.[2]. எடுத்துக்காட்டாக அவனா?, வந்தாயா? போன்ற வினாச் சொற்களில் ஆ இறுதி எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் ஆ சொல்லுக்கு வெளியே வருவதால் அது புறவினா எனப்படுகின்றது. ஆ அகவினாவாக வருவதில்லை. புறவினாவாக வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும்[3]. அவனா (அவன் + ஆ), வந்தாயா (வந்தாய் + ஆ) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
இனவெழுத்துக்கள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது ஆ, அ வுக்கு இன எழுத்தாக அமையும்.
பொருள் அடிப்படையில் அ, இ. ஈ என்பவற்றுக்கு ஆ இன எழுத்தாக அமையும்.
வடிவ அடிப்படையில், அ, உ, ஊ என்பன ஆ வுக்கு இன எழுத்துக்கள் எனவும் கூறப்படுகின்றது[4].
சொல்லில் ஆகாரம் வரும் இடங்கள்

‘ஆ’ எழுதும் முறை
தனி ஆ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஆ சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்[5]. இதிலிருந்து ஙா, டா, ண, ரா, லா, ழா, ளா றா, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களை எழுதுவோர் சிலர் டா, ரா, லா போன்ற எழுத்துக்களும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். டாம்பீகம், ராசா, லாவண்யா போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆகாரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
“ஆ” வும் மெய்யெழுத்துக்களும்

ஆ வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து அகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. [6]. இதனால், ஆகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஆகாரத்தைக் குறிக்கும் “கால்” குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.

18 மெய்யெழுத்துக்களோடும் ஆகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + ஆ கா காவன்னா
ங் இங்ஙன்னா ங் + ஆ ஙா ஙாவன்னா
ச் இச்சன்னா ச் + ஆ சா சாவன்னா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + ஆ ஞா ஞாவன்னா
ட் இட்டன்னா ட் + ஆ டா டாவன்னா
ண் இண்ணன்னா ண் + ஆ ணா ணாவன்னா
த் இத்தன்னா த் + ஆ தா தாவன்னா
ந் இந்தன்னா ந் + ஆ நா நாவன்னா
ப் இப்பன்னா ப் + ஆ பா பாவன்னா
ம் இம்மன்னா ம் + ஆ மா மாவன்னா
ய் இய்யன்னா ய் + ஆ யா யாவன்னா
ர் இர்ரன்னா ர் + ஆ ரா ராவன்னா
ல் இல்லன்னா ல் + ஆ லா லாவன்னா
வ் இவ்வன்னா வ் + ஆ வா வாவன்னா
ழ் இழ்ழன்னா ழ் + ஆ ழா ழாவன்னா
ள் இள்ளன்னா ள் + ஆ ளா ளாவன்னா
ற் இற்றன்னா ற் + ஆ றா றாவன்னா
ன் இன்னன்னா ன் + ஆ னா னாவன்னா
வரிவடிவம்

தமிழில் ஆகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் காலத்துக்குக்காலம் மாற்றமடைந்து வந்திருக்கிறது. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஆகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிக் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.

ஆகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் அகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஆகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.

(வாசகர் கருத்து:நன்று. ஆனால், கல்வெ ட்டு வடிவ வளர்ச்சியைக் கொண்டு வரி வடிவ வளர்ச்சியைக் கூறுவது தவறு.
ஏனெனில், ஓலைச் சுவடிகளில் இப் போதைய எழுத்து முறையே (மிகச் சிறு வேறுபாடுகளுடன்
இருந்தமையால் தான் காலங் காலமாகப் படி யெடுத்து வந்தனர். எனவேதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் காப்பியம் முதலான இலக்கிய நூல்களை நம்மால் இன்றும் படிக்க முடிகின்றது. பல இடங்களில் இவ்வாறு தவறான வரி வடிவ வளர்ச்சியைக் குறிப்பிடுவதால் பிறர் இதனை மேற்கோளாகக் குறிப்பிட்டுத் தவறான எண்ணத்தையே பரப்புகின்றனர்.-திருவள்ளுவன் இலக்குவனார்)

பிரெய்லியில் ஆகாரம்

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள “பாரதி பிரெய்லி” தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் வரிசையிலும், இரண்டாம் வரிசையிலும் வலது பக்கப் புள்ளிகளும், மூன்றாம் வரிசையில் இடது பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது ஆ வைக் குறிக்கும். இதை அருகில் உள்ள படம் காட்டுகிறது.

பாரதி பிரெய்லியில் ஆகாரம்

விக்கிப்பீடியாவில் இருந்து
Engr.Sulthan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: