ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!
9 Apr 2012

ஹைதராபாத்:வகுப்புவாத கலவரத்தை தொடர்ந்து ஹைதராபாதில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஏராளமானோருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது.
குர்மகுடா பகுதியில் ஹனுமான் கோயிலுக்கு அருகே சந்தேகத்திற்குரிய நிலையில் மாமிசம் காணப்பட்டதை தொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் தீவிரவாதிகள் முஸ்லிம்களின் கடைகளை அடித்து நொறுக்கினர். நேற்று காலை ஏழுமணிக்கு ஹைதராபாத் பழைய நகரத்தின் பகுதிகளான ஸய்தாபாத், மதனபட் ஆகிய இடங்களில் வகுப்புவாத வன்முறை வெடித்தது. வன்முறையை தொடர்ந்து இரு பகுதிகளிலும் அடுத்த உத்தரவு வரும் வரை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறினார்.
நிலைமைகள் கட்டுக்குள் வந்துள்ளதாகவும், வன்முறை பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் கூறினார். விசாரணைக்காக ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் போலீஸாரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிராக விசுவஹிந்து பரிஷத் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடும்போது போலீஸார் பார்வையாளர்களாக மாறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோயிலுக்கு அருகே மாமிசம் கிடப்பதை கண்ட உடன் ஒரு மத பிரிவினர் கொந்தளித்து ஒன்று திரண்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக போலீஸ் கூறுகிறது. தாக்குதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து எதிர் தரப்பினரும் ஒன்று திரண்டனர். வி.ஹெச்.பி உறுப்பினர்கள் வாகனங்கள் மீது கல்வீசி, இரண்டு வாகனங்களை தீவைத்துக் கொளுத்தினர். மக்கள் கூட்டத்தை கலைக்க போலீஸ் லத்தி சார்ஜில் ஈடுபட்டது. ஆனால், முஸ்லிம்கள் மீது மட்டுமே போலீஸ் தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிலருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் கூறுகிறது. கத்திக்குத்து காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறை நிகழ்ந்த பகுதிகள் போலீசாரின் முழு கண்காணிப்பில் இருப்பதாக கமிஷனர் கூறினார். போலீசாருடன் ஒத்துழைக்கவும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் போலீஸ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேவேளையில், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆந்திரபிரதேச முதல்வர் கிரண்குமார் ரெட்டி டி.ஜி.பி தினேஷ் ரெட்டிக்கு உத்தரவிட்டுள்ளார். மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்திய முதல்வர், நிலைமைகள் குறித்து மதிப்பீடுச் செய்தார்.
வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் கடைகள், வியாபாரா நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன.

http://ping.fm/ugbkT

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: