Archive for March 10th, 2012

அழகிய கடன் I.A.S. அகாடமி

அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் கடந்த ஜனவரி மாதம் “அழகிய கடன் I.A.S. அகாடமி” என்ற பெயரில் IAS/IPS பயிற்சி மையம் ஒன்று துவங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!!.

நோக்கம்
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேர்க்கை (Admission)

இதற்கான முதற்கட்ட சேர்க்கைக்காக கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 120 முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்கு (Interview) பிறகு சுமார் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பயிற்சி
இந்த 20 மாணவர்களுக்கு I.A.S. பரீட்சைக்கு தேவையான பயிற்சிகள் முழு வீச்சில் தரப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி, தங்குமிடம், உணவு, புத்தகங்கள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ்!
தற்பொழுது திறமையான பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களால் பாடங்கள் பயிற்றுவிக்கபடுகின்றன. இம்மாணவர்கள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் மே 20-ம் தேதி நடைபெறவிருக்கும் I.A.S பரிட்சையில் (preliminary) கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். இவர்கள் வெற்றி பெற வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆமீன்.

இது தொடர்பான ஆடியோ / வீடியோ-விற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://ping.fm/VvTmc

நிர்வாகக்குழு
இந்த பயிற்சி மையம் மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்களை தலைவராக கொண்டு, மற்றும் Governing Body அமைப்பில் அபுல் ஹசன் I.A.S. (retired), R.D.நசீம் I.A.S., பேரா. இஸ்மாயில் (முன்னாள் முதல்வர், அரசு I.A.S பயிற்சி மையம்), திரு. கார்த்திகேயன் (இயக்குனர், மனித நேயம் I.A.S பயிற்சி நிலையம்), S.அஹ்மத் மீரான் (Professional Couriers) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் மேலான வழிகாட்டுதலுடன், சைதை S.துரைசாமியின் மனிதநேய I.A.S. பயிற்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

செலவுகள்
இந்த பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் பயிற்சியாளர் சம்பளம், ஊழியர் சம்பளம், உணவு, தங்குமிடம், புத்தகங்கள் போன்ற அனைத்துக்கும் சேர்த்து ஒரு மாதத்திற்கு ரூ. 1 இலட்சம் முதல் 1.25 இலட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வேண்டுகோள்
இஸ்லாமிய சமுதாயம் மேம்படவும், இளைஞர் சமுதாயம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வீறு நடை போடவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த உன்னதமான முயற்சியில் உங்களின் பங்களிப்பின்றி நாங்கள் வெற்றி பெற முடியாது. எனவே, வல்லோன் அல்லாஹ்வின் அருட்கொடை மீதும், உலகிலேயே தர்ம சிந்தனை உள்ள சமுதாயமான நம் சமுதாயத்தின் தர்ம சிந்தனையின் மீதும் நம்பிக்கை வைத்து இம்முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த அற்புதமான இறைப்பணியில் தாங்களும் பங்கெடுத்து தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய முயற்சிகளை இக்லாசான முயற்சிகளாக கபூல் செய்து அதற்குரிய பரிபூரண கூலியை தந்தருள்வானாக. ஆமீன்.

தொடர்புக்கு

அழகிய கடன் அறக்கட்டளை,
மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
822, அண்ணா சாலை,
சென்னை – 600 002
Ph. 044-4214 1333 , Cell: 9840889678 , 9840899012 ,
e-mail : admin@makkamasjid.com
கூடுதல் தகவலாக,

இது தொடர்பாக நமது சமுதாய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி, மாவட்டந்தோறும் சமுதாய ஆர்வலர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இது வரை 4 மாவட்டங்களில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாம். இதுவல்லாத மற்ற மாவட்டங்களில் இக்குழுவை அமைத்து சமுதாய சேவையாற்ற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 9600006246 (சகோ. ஆரிப்)

இது தொடர்பாக சவூதி அரேபியாவில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள,

சகோ. சிக்கந்தர், ரியாத் (00966551841027)
சகோ. சாதிக், ஜித்தா (00966559609469)

இச்செய்தியை நீங்கள் படிப்பதோடும் சிந்திப்பதோடும் நிறுத்தி விடாமல், மற்ற சகோதரர்களுக்கும் கொண்டு சென்று இது தொடர்பாக உங்கள் ஆலோசனைகளையும் ஆதரவையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

சமுதாயத்திற்காக சிந்திப்போம், திட்டமிடுவோம். இன்ஷா அல்லாஹ் (இம்மை & மறுமையில்) வெற்றி பெறுவோம்.

அன்புடன்

அனீஸ் முனவ்வர்
அல்கோபர், சவூதி அரேபியா

(மாதவலாயம், குமரி மாவட்டம்)

கூகுள் பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும்.

கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு கிளிக் செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நீட்சியின் பயன்கள்:
ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அடிக்கடி உபயோகிக்கும் கூகுள் சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே கிளிக்கில் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.
உங்களுக்கு எத்தனை கூகுள் சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
எந்த இணையதளத்தின் இணைய பக்கத்தையும் ஜிமெயில் மற்றும் பிளாக்கரில் share செய்யும் வசதி.
கூகுள் சேவைகளை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தேர்வு செய்து கொள்ளலாம்.
ஜிமெயில் மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு.
உபயோகிக்கும் முறை:

இந்த Terminal for Google நீட்சியை டவுன்லோட் செய்து குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொண்ட பிறகு க்ரோமில் தோன்றும் அந்த ஐகானை கிளிக் செய்தால் கூகுள் சேவைகள் வரும் அதில் நிறைய கூகுள் சேவைகள் இருக்கும் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Options Page என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Services என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை கிளிக் செய்தால் வரும், Disabled Services என்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம்.

இனி அனைத்து சேவைகளின் URL ஞாபகம் வைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கிளிக்கில் எந்த சேவைக்கும் சுலபமாக செல்லலாம்.

http://ping.fm/XP97c

ALAVUDEEN

* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don’t waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it’s ur duty.
__._,_.___

இதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும்

காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.

தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து… இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்… சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?

அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?

அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?

ஆய்வின் முடிவு
இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:

ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காம்ம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!
இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே!அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!

இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?

அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.

எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?

கலாசாரச் சீரழிவு
கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?

பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள்.

(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களே! கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே!உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

எழுதிவிட்டேன் பலதடவை
முஸ்லிம் இளைஞர்களும் இளம்பெண்களும் தமிழ்நாட்டில் காதலின் பெயரால் அழிந்துகொண்டிருப்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் நானும் பலமுறை எழுதிவிட்டேன். கடந்த 2011 ஜூலை 13ல் வெளியான தமிழக அரசின் கெஜட்டில் உள்ளபடி மதம் மாறிய 106 பேரில் 9 பேர் முஸ்லிம்கள் என்ற உண்மையை வெளியுலகுக்குக் கொண்டுவந்து, சமுதாய ஏடுகள் அனைத்திற்கும் கட்டுரை அனுப்பினேன். பெரும்பாலான இதழ்களில் வெளிவந்தது.

நமது வலைத்தளத்திலும் வெளியிட்டோம். பல அன்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவும் செய்தார்கள். தமிழகத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் இக்கொடுமையைத் தடுத்துநிறுத்த ஜமாஅத் நிர்வாகிகளும் உலமாக்களும் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களும் நடந்தன.

சென்னை மஸ்ஜித் மஃமூர் பள்ளிவாசலில் 17.01.2012 அன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதன் ஒலிப்பதிவு நமது முகநூல் பக்கத்தில் வெளியாகியும் உள்ளது. m(அதன் இணைப்புகளை க்ளிக் செய்து செவியுறலாம்) http://ping.fm/T69US http://ping.fm/glkZm இன்னும் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக வடிவில் சென்னை ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது. சமுதாயத்தில் ஓர் அசைவு தென்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ்…

ஆனாலும், வேகம் போதாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய ஒரு ஆபத்துக்கு, நத்தை வேகத்திலான முயற்சிகள் எப்படி ஈடு கொடுக்கும்? மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் prசில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும்‘அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)
அண்மையில் ஒரு செய்தி படித்தேன்: காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.

“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.

கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது;இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243). பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?

தீக்குண்டத்தில் நிர்வாணமாக
நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:

அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்த்து. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)

தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், “இவர்கள் யார்?” என்று கீ

உலகின் மிகப்பெரிய பல்கலைக் கழகம் ( Largest university in the world )

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். கடந்து ஒரு வாரமாக தேர்தல் முடிவுகள், புதிய முதல்வர், புதிய அமைச்சர் என பல எதிர்பார்ப்புகளுடன் கழிந்து போனது. சரி இனி நாம் விசயத்திற்கு வருவோம். பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?

ஆம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலே உடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன் இப்பொழுது ஒரு புதிய சாதனையை பெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..! உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World’s Largest University Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப் பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக் கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26 கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!!

உலகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்கு மெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு விரிந்துக் கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!

கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

இதுமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு 700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம், நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம், உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.

இத்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20 பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது தகவல்கள். என்ன நண்பர்களே..! இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

__._,_.___

COORDINATION COMMITTEE FOR INDIAN MUSLIMS (CCIM)

Press Conference on Journalist Muhammad Ahmad Kazmi

Media fraternity is cordially invited to cover a press conference tomorrow, Saturday, 10 March 2012 at 3 p.m. at the Delhi Press Club lawns. Leaders of Muslim organisation and community will address the press conference to put across the community’s viewpoint about the arrest of senior Urdu journalist Muhammad Ahmad Kazmi on terror-related flimsy charges at the instance of an interested foreign power.

Venue: Delhi Press Club Lawn

Date and Time: Saturday, 10 March 2012, 3 p.m.

Speakers at the press conference will include:
Muhammad Adeeb, M.P.
Mujtaba Farooq, President, Welfare Party of India
Dr Zafarul-Islam Khan, President, All India Muslim Majlis-e Mushawarat
Maulana Muhsin Taqawi, President, National Council of Shia Ulama
Maulana Abdul Hameed Nomani, Secretary, Jamiat Ulama-e Hind
Muhammad Ahmad, Secretary, Jamaat-e Islami Hind
Maulana Abdul Wahab Khilji, President, Islahi Movement,
Maulana Ataur Rahman Qasmi, Chairman, Shah Waliullah Institute
Maulana Jalal Haidar Naqvi, Secretary, All India Shia Ulama Council
Akhlaq Ahmad, Secretary, Association for Protection of Civil Rights
Shuaib Shaikh, Secretary, Students Organisation of India
[For media comments only: Mujtaba Farooq, 09810863691 ; Dr Zafarul-Islam Khan 09811142151 ; Maulana Jalal Haidar Naqvi, 09213104134 ]