காடை(Quail) வளர்ப்பு

காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.

இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்

மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.

ஜப்பானியக் காடை இறைச்சி

சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.

ஜப்பானியக் காடை விற்பனை

ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

காடை வளர்ப்பு

ஜப்பானியக் காடை கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் முட்டை மற்றும் கறிக்காக பல காடை பண்ணைகள் உருவாகியுள்ளன. தரமான இறைச்சிக்கான விழிப்புணர்வே இதற்கு காரணம்.
கீழ் கண்ட காரணிகள், காடை வளர்ப்பை பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் எளிமையாக்கி உள்ளன

மிகக் குறைவான சந்ததி இடைவெளி

அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை

தடுப்பூசி தேவையில்லை

குறைவான இடவசதி இருந்தால் போதுமானதாகும்

கையாளுவற்கு எளிமை

குறுகிய காலத்தில் பருவமடைதல்

அதிக அளவில் முட்டையிடும் திறன் – பெண் காடைகள் 42 நாட்களில் முட்டையிட துவங்குகின்றன

கரி-உத்த ம்

மொத்த முட்டை பொரிப்புத்திறன் : 60 – 76%

4 வார எடை : 150 கிராம்

5 வார எடை : 170 – 190 கிராம்

4 வாரத்தில் தீவனத்திறன் : 2.51

5 வாரத்தில் தீனவ திறன் : 2.80

அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 – 28 கிராம்

கரி-உஜாவால்

மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன் : 65%

4 வார எடை : 140 கிராம்

5 வார எடை : 170 – 175 கிராம்

4 வாரத்தில் தீவனத்திறன் : 2.93

அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 – 28 கிராம்

கரி-ஸ்வேதா

மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன் : 50-60 %

4 வார எடை : 135 கிராம்

5 வார எடை : 155-165 கிராம்

4 வாரத்தில் தீவனத்திறன் : 2.85

5 வாரத்தில் தீனவ திறன் : 2.90

அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்

கரி-பியர்ல்

மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன் : 65 – 70 %

4 வார எடை : 120 கிராம்

அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்

50% முட்டை உற்பத்தி வயது : 8 – 10 வாரம்

முட்டை உற்பத்தி : 285 – 295 முட்டைகள்

காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்

மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் காடையை வளர்க்கலாம்.
குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்.
காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம்.
காடைகளை 5 முதல் 6 வாரங்களில் விற்பனை செய்யலாம்.
மிகக் குறைந்த அளவு தீவனமே போதுமானது.
காடை இறைச்சியில் அதிக அளவு புரதமும் 22% குறைந்த அளவு கொழுப்பும் 5 % இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாகும்.
ஊட்ட சத்து நிறைந்த முட்டை.
கொட்டகை அமைப்பு.

1.ஆழ்கூள முறை
இம்முறையில் ஒரு சதுர அடியில் 6 காடைகள் வரை வளர்க்கலாம்.
காடைகள் முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின்கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். இதனால் வளரும்பருவத்தில் அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தி வீணாகிகுறைந்த எடைகொண்டதாக உருவாவதை தடுக்கலாம்.
2. கூண்டு முறை –

கூண்டு முறை வளர்ப்பில் காடைகள்
வயது
கூண்டின் அளவு
காடைகளின் எண்ணிக்கை
முதல் 2வாரங்களுக்கு
3×2 1/2×1 1/2அடி
100
3 முதல் 6வாரங்களுக்கு
4×2 1/2×1 1/2அடி
50
கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5 க்கு 1.5 செ.மீ.உள்ளதாக இருக்க வேண்டும்.
கூண்டுகளை 4 முதல் 5 அடுக்குகளாக அமைக்கலாம். ஒவ்வொரு கூண்டுக்கும்கீழே தகடுகள் பொருத்தி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்தலாம்.
தீவனப் பாரமரிப்பு

காடைகளுக்கு தீவனங்களை கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்

தீவனப் பொருட்கள்
குஞ்சுப் பருவம்
வளரும் பருவம்

0-3 வாரங்கள்
4-6 வாரங்கள்
மக்காச்சோளம்
27
31
வெள்ளைச் சோளம்
15
14
எண்ணெய் நீக்கிய அரிசி தவிடு
8
8
கடலை பிண்ணாக்கு
17
17
சூரிய காந்தி புண்ணாக்கு
12.5
12.5
சோயா மொச்சை தூள்
8

மீன் தூள்
10
10
தாது உப்புகள்
2.5
2.5
கிளிஞ்சல் தூள்

5

காடை தீவனம் மிக சிறிய துகள்களாக இருப்பது மிகவும் அவசியம்.
ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் தீவனத்தை உட்கொள்ளும்.
ஆறு வார வயதிற்கு மேல் உள்ள காடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 30-35 கிராம்தீவனத்தை அவற்றின் முட்டை உற்பத்திற்கு ஏற்ப அளிக்க வேண்டும்.
காடைகளின் தீவன மாற்று திறன் 12 முட்டை இடுவதற்கு 400 கிராம் தீவனம்உட்கொள்கிறது.
தீவனம் தயாரிக்க முடியாத போது, இறைச்சிக் கோழிக்கான ஆரம்பக்காலதீவனத்தை 75 கிலோ வாங்கி அதனுடன் 5 கிலோ பிண்ணாக்கு தூளை கலந்துகொடுக்கலாம். தானியத்தின் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒருமுறைஅரைத்து தூளின் அளவை குறைத்து உபயோக்கிலாம்
காடை பண்ணை பாரமரிப்பு முறைகள்

காடை குஞ்சுக்கொட்டகை

6 வார வயதில் பெண் காடைகள் 175-200 கிராம் எடையும் ஆண் காடை 125-150கிராம் எடையும் இருக்கும்.
காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பிக்கும். மாலை நேரத்தில் காடைகள் முட்டையிடும்.காடைகள் 22 வது வயது வரை முட்டை இடுகின்றன.
காடை முட்டை எடை சுமார் 9 கிராம் இருக்கும்.
ஆண் காடைகளின் மார்பு குறுகலாகவும், பழுப்பு வெள்ளை நிறமும் கலந்து ஒரே சீராக இருக்கும். பெண் காடைகளின் மார்பு பகுதி விரிந்ததும் பழுப்பு நிறத்துடன் கறுப்பு சாம்பல் நிற புள்ளிகள் கழுத்து, முகம் மற்றும் மார்பு பகுதிகளில் காணப்படும். நான்கு வாரங்களுக்கு பிறகே ஆண், பெண் காடைகளை இனம்கண்டறிய முடியும்
முட்டைக்காக காடைகள் வளர்க்கும்போது 4 வது வாரத்திலேயே ஆண் காடைகளை பெட்டை காடைகளிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும்.
முட்டையிடும் காடைகளுக்கு 16 மணி நேரம் வெளிச்சம் அவசியம் இருக்கவேண்டும்
காடைக்குஞ்சு பராமரிப்பு முறைகள்

காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச்சிறியவையாக 8-10 கிராம் வரைஎடையுள்ளதாக இருக்கும். இதனால் கோழிக்குஞ்சுகளை விடக் காடைக்குஞ்சுகளுக்கு அதிகம் வெப்பம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்கின் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றின் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத்திணறி குஞ்சுகளில் இறப்பு அதிகம் காணப்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், கொட்டகையில் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத்தடை ஏற்படும் போதும் காடைக்குஞ்சுகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கி இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு
இனப்பெருக்கம்

காடை முட்டை
காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8 வது வாரத்தில் முட்டைஉற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும்.
கருவுட்ட முட்டை பெற வேண்டுமெனில் பெட்டை காடைகளே ஆண் காடைகளுடன் 8 – 10 வார வயதில் சேர்க்க வேண்டும். 5 பெண் காடைகளுக்கு ஒரு ஆண்காடை என்ற விகித்த்தில் வளர்க்கலாம்.
அடைவைத்த 18 வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும்.
500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடை குஞ்சுகளை உற்பத்திசெய்யலாம்.
கோழிக் குஞ்சுப் பொரிப்பகத்தை சரியான படி மாற்றம் செய்தால் அதிக காடைமுட்டைகளை அடைவைக்கலாம்.
காடைகளில் ஏற்படும் நோய்கள்
முட்டையிடும் காடைகளுக்கு போதுமான தாது உப்புகளும், வைட்டமின்களும்போதுமான அளவில் அளிக்கப்படாததால் குஞ்சுகள் பொரிக்கும் போது அவற்றின் கால் வலுவிலந்தும், நோஞ்சானாகவும் இருக்கும். இதனை தவிர்க்க இனப்பெருக்கம் செய்யும் காடைகளுக்கு போதுமான அளவு தாதுஉப்புகளும்,வைட்டமின்களும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்
கோழிகளைவிட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருப்பதால்நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.
முறையான காடைக்குஞ்சு பராமரிப்பு, பண்ணைகளில் முறையான கிருமி நீக்கம்,எப்பொழுதும் காடைகளுக்கு தூய்மையான குடிநீர், தரமான கலப்புத்தீவனம்போன்றவற்றை கையாண்டால் காடைகளில் இறப்பினை தடுக்கலாம்
காடை இறைச்சி

சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 70 முதல் 73% வரை இருக்கும். 140 கிராம் எடையுள்ள காடையிலிருந்து 100 கிராம் எடை இறைச்சி கிடைக்கிறது
காடை வளர்ப்பில் உள்ள சிரமங்கள்

ஆண் காடைகளின் கூவும் சத்தம் ரொம்ப இடையுறாக இருக்கும்.
ஆண் பெண் காடைகளை சேர்த்து வளர்க்கும் போது ஆண் காடைகள் மற்றகாடைகளை கொத்தி குருடாகவும் சில சமயம் இறக்கவும் செய்கின்றன.
கூண்டுகளை தினமும் சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீசும்.
தகவல்:இணைய தளத்திலிருந்து

Engr.Sulthan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: