IAS வெறும் கனவல்ல, நிஜமே!

இந்த ஆண்டிற்கான(2012) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் தேதி(20.05.2012) அன்று, முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும்.

இந்திய ஆட்சி பணி தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் தான், இந்தியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ்(IAS), இந்தியன் போலீஸ் சர்வீஸ்(IPS), இந்தியன் பாரின் சர்வீஸ்(IFS), இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ், இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 25 சிவில் சர்வீஸ் பணிகளில் சேர முடியும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு கட்டணம்
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.UPSCயின் http://ping.fm/gYwqZ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்துஅனுப்ப வேண்டும்.
பெண்கள், SC, ST, உடல் ஊனமுற்றோர் தவிர்த்து, மற்ற அனைவரும் தேர்வுக்கட்டணமாகரூபாய் 50 செலுத்த வேண்டும்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்ச தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமோ பட்டம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு இணையான கல்வி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.. பட்டபடிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்களும் முதல் நிலை தேர்வில் கனல்து கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் மெயின் தேர்வு எழுத செல்லும் பொது, தேர்ச்சி பெற்ற கல்வி சான்றிதழ்களின் நகல்களை சமர்பிக்க வேண்டும். பட்டபடிப்புகளுக்கு இணையான டிப்ளமோ சான்றிதழ்கள் பெற்றவர்களும் இதில் அனுமதிக்கபடுவர். அத்தோடு 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெரும் மாணவர்கள், இந்திய நிர்வாகப் பணிகளில் சேர்ந்து நாட்டின் கொள்கை ரீதியான பல முடிவுகளை எடுக்கும் உயர்ந்த வாய்ப்பை பெறுகிறார்கள்.

தேர்வு நடைமுறை :
இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நடைபெறும் முதல்நிலை(Preliminary) தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டமாக நடைபெறும் மெயின் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு நியமிக்கபடுகிறார்கள்.

முதல்நிலை தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். அதன் முதல்தாள் “ஜெனரல் ஸ்டடீஸ்(General Studies) எனப்படும் பொது அறிவு தாளில் ஏற்கனவே இருந்த பல பாடங்கள் தற்போதும் இடம் பெற்று உள்ளன. தேசிய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சியியல், சுற்றுசூழல், பல்லுயிர் பெருக்கம், பருவநிலை மாற்றம் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளில் அன்றாட பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து முதல்தாளில் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெறும் இத்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.

இரண்டாம் தாள் முற்றிலும் திறனறித் தேர்வாக (Civil Services Aptitude Test – CSAT) மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவேஇருந்து வந்த விருப்பப்பாடம் இனி இருக்காது. இந்தத் தாளில் Comprehension, Communication Skills, Inter Personal Skills , Logical Reasoning, Decision Making & Problem Solving,, General Mental Ability, English Language Comprehension Skills என்று பாடத் திட்டமே லேசாகபதட்டம் கொள்ளவைக்கிறது. கணிதத்திற்கும் ஆங்கிலப் புலமைக்கும் தீனிபோடுவதற்கு ஏதுவாக இந்தப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த இரண்டாம் தாளுக்கான மதிப்பெண்கள் 200.

ஆனால் இதுதான் இப்போது பெருத்த விவாதத்துக்கு உள்ளான ஒன்றாகியுள்ளது. இந்தஆப்டிடியூட் பாடம் இதுவரை நம் தமிழக மாணவர்களுக்கு எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படுவதில்லை. அதனால் இனி கிராமப்புறம் மற்றும்தமிழ்வழியில் பயிலும் மாணவர்களால் ஐ.ஏ.எஸ். என்பதை நினைத்தும் பார்க்கமுடியாது என்ற அச்சம் பரவலாக கிளறிவிடப்படுகிறது. ஐஐடி, ஐஐஎம் மனதில்வைத்துத்தான் CSAT கொண்டு வரப் பட்டதோ என்ற சந்தேகம் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இதனால் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இத்தேர்வு மாற்றத்தால் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை. மனப்பாடத்திற்கும்ஞாபக சக்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த பழைய தேர்வு முறையைவிட இந்த முறை தகுதியானவர்களை பிரித்தறிய வாய்ப்பாக இருக்கும். உதாரணமாகஒரு பிரச்சினைக்கான சூழலைக் கேள்வியாகக் கேட்டு நான்கு விதமான தீர்வுகளில்மிகப் பொருத்தமான ஒன்றை நம் பதிலாகக் கேட்பார்கள். தேர்வர் அதிகஉணர்ச்சிவயப்படக்கூடியவரா, மிஸ்டர் கூல் பெர்சனாலிலிட்டியா, சட்டத்தைமட்டும் கடுமையாக பின்பற்றும் நபரா, சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒரேஅளவீட்டில் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் சோதித்து அறிகிறார்கள்.

இதன்மூலம் டெல்லிலியில் உள்ள பெரிய நிறுவனங்கள் தரும் குறிப்புகளை மட்டும்ஆண்டுக்கணக்காக மனப்பாடம் செய்து படித்துவரும் மாணவர்கள் இனிமேல்வடிகட்டப்படுவார்கள். மருத்துவம்படித்திருந்தாலும் கலைப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் இனி மதிநுட்பம்எனும் ஒரே அளவுகோலில் தான் பரிசோதிக்கப்படுவார்கள். ஆரம்பக் காலத்தில்கலைப் படிப்பைப் படித்து வருபவர்களுக்கும், தாய்மொழியில் கல்விபயின்றவர்களுக்கும் CSAT தேர்வு கொஞ்சம் சிரமம் என்பது உண்மைதான்.அதற்குக் காரணம் பாடத்திட்டத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் கணிதம்தான்!

அரசுமற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாற்றப்பட்ட தேர்வுமுறைக்குத்தகுந்தபடி தங்கள் பயிற்சி வகுப்பின் முறைகளையும் மாற்றிக் கொண்டுதற்போது இந்த பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி அளித்து வருகிறார்கள்.இந்தத் தேர்வுமுறையால் கல்லூரி நாட்களிலிருந்தே இந்தியில் விருப்பப்பாடங்களை எடுத்து பல வருடங்களாக மனப்பாடம் செய்து படித்து வரும் வடமாநிலமாணவர்களுக்கும் பாதிப்புதான். ஆனாலும் முதல்நிலைத் தேர்வுத்தாள்ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருப்பதால் இந்தி மாணவர்களுக்கு அது சாதகமாக இருக்கும்.

சிவில்சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, நாட்டின் உயர்ந்த பதவியை அடைய ஆசை மட்டுமேபோதாது. அதற்கான முயற்சியும், நுணுக்கமும் கட்டாயம் தேவை. முதல்நிலைதேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு முதல் மாறியுள்ள நிலையில், மாறுதல் குறித்து தெளிவாகஅறிந்து, அதற்கு தயாராகும் முறைகள் குறித்தும் நன்கு தெரிந்துகொள்வதுஅவசியம்.எனவே, முதல்நிலை தேர்வில் எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும், எவ்வாறு அதைஎதிர்கொள்வது உள்ளிட்டவற்றை பற்றி இன்ஷா அல்லாஹ் வரும் வியாழக்கிழமை(16.02.2012) அன்று காண்போம்.

முக்கிய தேதிகள்:
2012ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு 04.02.2012
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி 05.03.2012
தேர்வு நடைபெறும் நாள் 20.05.2012


MUDUVAI HIDAYATH

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: